தமிழ்நாடு

'பி2பி போர்ட்டல்' சேவையில் இணைய ஆர்வம்! ஏற்றுமதியாளர், வர்த்தகர்கள் சுறுசுறுப்பு

Updated : பிப் 11, 2020 | Added : பிப் 11, 2020 | கருத்துகள் (1)
Advertisement
'பி2பி போர்ட்டல்' சேவையில் இணைய  ஆர்வம்! ஏற்றுமதியாளர், வர்த்தகர்கள் சுறுசுறுப்பு

திருப்பூர்:ஏ.இ.பி.சி., யின் 'பி2பி போர்ட்டல்' சேவையில் இணைய, ஆடை ஏற்றுமதியாளர்கள், வெளிநாட்டு வர்த்தகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
உலக அளவில் ஆன்-லைன் வர்த்தகம் அதிகரித்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில், பிஸினஸ் டூ பிஸினஸ் (பி2பி) என்கிற போர்ட்டல் சேவையை புதிதாக துவக்கி யுள்ளது.
இந்திய ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு புதிய வர்த்தக வாய்ப்புகளை பெற்றுத்தரும் வகையிலும், வெளிநாட்டு வர்த்தகர்கள் இந்திய நிறுவனங்களுக்கு ஆர்டர் வழங்க ஏதுவாக இந்த சேவை துவக்கப்பட்டுள்ளது.ஏ.இ.பி.சி.,ல் உறுப்பினராக உள்ள ஆடை ஏற்றுமதி நிறுவனங்கள், இந்த தளத்தில் இலவசமாக பதிவு செய்யலாம்.
ஏற்றுமதி ஆடை தயாரிப்பு நிறுவனங்கள், தாங்கள் நிறுவனம், குழந்தை, பெண்கள் ஆடை என, தயாரிக்கும் ஆடை விவரம்; உற்பத்தி திறன் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இந்த தளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும்.அதேபோல், வெளிநாட்டு வர்த்தகர்களும், தங்கள் விவரங்களை பதிவு செய்வர். இந்த தளத்தை பயன்படுத்தி, வெளிநாட்டு வர்த்தகர்கள், தங்களிடம் உள்ள ஆர்டர்களை, எந்த நிறுவனத்துக்கு அளிப்பது என எளிதாக முடிவெடுக்க முடியும். இந்த சேவையால், இந்திய ஆடை ஏற்றுமதி நிறுவனங்களுக்கு அதிகளவில் வர்த்தக வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏ.இ.பி.சி.,ன் போர்ட்டலில் விவரங்களை பதிவு செய்ய ஆடை ஏற்றுமதி நிறுவனங்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. இதுவரை, நாடுமுழுவதும் உள்ள 1350 ஏற்றுமதி ஆடை தயாரிப்பு நிறுவனங்கள்; அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, கனடா நாடுகளைச்சேர்ந்த 65 வர்த்தகர்கள் தங்கள் விவரங்களை பதிவேற்றம் செய்துள்ளன.திருப்பூரில் உள்ள அனைத்து பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்களும் விவரங்களை பதிவேற்றம் செய்து பயன்பெறவேண்டும் என, ஏ.இ.பி.சி., அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
11-பிப்-202015:04:32 IST Report Abuse
Sathyanarayanan very good initiative. hope all traders utilize this. BJP should advertise and take credit for this.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X