பொது செய்தி

தமிழ்நாடு

புதுமடம் அரசு பெண்கள் பள்ளி 5 ஏக்கர் நிலத்தை காணவில்லை

Added : பிப் 11, 2020
Advertisement

ராமநாதபுரம்:புதுமடம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு தானமாக வழங்கப்பட்ட 5 ஏக்கர் நிலத்தைகாணவில்லை, என அப்பகுதியினர் கலெக்டர் வீரராகவராவிடம் புகார் அளித்தனர்.
மனுவில் கூறியிருப்பதாவது: புது மடம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு அப்துல் ரஸீன் நிஜாம் பேகம் என்பவர் 5 ஏக்கர் 13 சென்ட் நிலத்தை ஆறு ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிக்கு தானமாகஎழுதிக் கொடுத்தார். தற்போது அந்த இடங்களை தனி நபர்கள் சிலர் மக்களை ஏமாற்றி விற்பனை செய்ய முயன்று வருகின்றனர்.அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு சொந்தமான இந்த இடத்தை நேரில் அளவீடு செய்து, பள்ளி பெயரில் பட்டா வழங்க வேண்டும். இதன் மூலம் தனி நபர்கள் விற்பனை செய்யாமல் தடுக்க வேண்டும்.இவ்வாறு கூறியுள்ளனர். இதில் புதுமடம் வடக்கு தெரு ஜமாஅத், ஜாமியா மஸ்ஜித், நடுத்தெரு, மஜ்து நுார், தெற்கு தெரு மஸ்ஜித் ரஹ்மத் அமைப்பு, தெற்கு தெரு நற்பணி மன்றத்தினர் வந்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X