பொது செய்தி

தமிழ்நாடு

நகராட்சியில் அடிப்படை வசதி கோரி பா.ஜ., வினர் மனு

Added : பிப் 11, 2020
Advertisement

ராமநாதபுரம்:ராமநாதபுரம் நகர் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பா.ஜ., வினர் நகராட்சி கமிஷனரிடம் வலியுறுத்தினர்.
ராமநாதபுரம் நகராட்சி பகுதியில் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ள சாலைகளைசீரமைக்க கோரியும், எரியாத மின் விளக்குகளை மாற்றவும், பொது மக்களை அச்சுறுத்தும்நாய்களை அப்புறப்படுத்த வேண்டியும் பா.ஜ.,வினர் கோரிக்கை விடுத்தனர்.இதனை வலியுறுத்தி நகர் தலைவர் வீரபாகு, மாவட்ட துணைத்தலைவர் குமார், மாவட்ட இளைஞர் அணித்தலைவர் மணிமாறன், தமிழ் வளர்ச்சிப்பிரிவு மாவட்டத்தலைவர் மலைமேகு, முன்னாள் நகர் தலைவர்கள் நாகேஸ்வரன், குமரன், நகர நிர்வாகிகள் ராஜேந்திரன், ராகேஷ்குமார், பூபதிராஜா, இளங்கோவன், ஜனார்த்தனன், யோகேஷ்குமார் உட்பட நிர்வாகிகள் ராமநாதபுரம் நகராட்சி கமிஷனர் விஸ்வநாதனிடம் வலியுறுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X