பொது செய்தி

தமிழ்நாடு

2,962 மாணவருக்கு சைக்கிள் பள்ளிகளில் வினியோகம்

Added : பிப் 11, 2020
Share
Advertisement

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், 2 ஆயிரத்து 962 மாணவர்களுக்கு நேற்று விலையில்லா சைக்கிள் வினியோகத்தை, தெற்கு எம்.எல்.ஏ., குணசேகரன் துவக்கி வைத்தார்.பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், 661 மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது. கூட்டுறவு வங்கி தலைவர் சடையப்பன், பள்ளி தலைமை ஆசிரியர் ரத்தினம் பங்கேற்றனர்.
கே.எஸ்.சி., பள்ளியில், தலைமை ஆசிரியர் ராஜா தலைமை வகித்தார். 567 மாணவர்களுக்கு சைக்கிள் வினியோகிக்கப்பட்டது. ஜெய்வாபாய் பள்ளியில் நடந்த விழாவில், ஆயிரத்து, 335 மாணவியருக்கு சைக்கிள் வழங்கப்பட்டது. தலைமை ஆசிரியர் ஸ்டெல்லா உடன் இருந்தார்.நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், தலைமை ஆசிரியர் பழனிசாமி தலைமை வகித்தார், இங்குள்ள, 397 பிளஸ் 1 மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கப்பட்டன. மொத்தமாக, 2,962 மாணவ, மாணவியருக்கு இலவச சைக்கிள் வினியோகிக்கப்பட்டது. பள்ளி பெற்றோர் - ஆசிரியர் கழக நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X