பொது செய்தி

தமிழ்நாடு

கூலித்தொழிலாளியை தாக்கிய போலீசார்:குறைதீர் கூட்டத்தில் குவிந்த புகார்கள்

Added : பிப் 11, 2020
Share
Advertisement

விருதுநகர்:கூலித்தொழிலாளியை தாக்கிய போலீசார்,தெருவில் தடுப்புசுவர் என பல்வேறு பிரச்னைகள் குறித்து விருதுநகரில் கலெக்டர் கண்ணன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் ஏராளமானோர் மனுக்கள் அளித்தனர்.

இதில் அயோத்தி தாசர் மாணவர்கள் அமைப்பினர் அளித்த மனுவில், 'வத்திராயிருப்பு வ.புதுப்பட்டி திரு.வி.க., தெருவை மறித்து சிலர் 2010ல் சுவர் கட்டினர். பல மனுக்கள் அளித்தும் இன்றுவரை சுவர் அகற்றவில்லை. இச்சுவருக்கு பின்புறம் அரசு பொது சுகாதார வளாகம் உள்ளது. எங்கள் பகுதி மக்களை பொது சுகாதார வளாகத்தை பயன்படுத்த அனுமதிப்பதில்லை. சுவருக்கு பின்புறமாக உள்ள துவக்க பள்ளியில் எங்கள் பகுதி குழந்தைகளை படிக்கவும், ஓட்டு போடுவது போன்ற ஜனநாயக கடமை ஆற்றுவதற்கும் அனுமதிப்பதில்லை. சுவரை அகற்ற மாவட்ட நிர்வாகம் உதவ வேண்டும்,' என கேட்டுள்ளனர்.
முதியேருக்கு மூச்சு திணறல்
ஸ்ரீவில்லிபுத்துார் மடவார்வளாகம் சிவபாலன் அளித்த மனுவில், "ஸ்ரீவில்லிபுத்துாரில் அரிசி ஆலைகளில் நெல் அவித்த நீரை சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேறுவதாலும், எரிந்த உமியின் சாம்பல் புகை போன்றவை வெளியேறி பல்வேறு பாதிப்புகள் ஏற்படுத்துகின்றன. இரவு நேரங்களில் நெல் அவிப்பதால் குடியிருப்பு பகுதிகளில் துர்நாற்றம் வீசுகிறது. மழைநீர் சேகரிப்பு தொட்டிகளில் சாம்பல் படிவதால் மழைநீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது.
சாம்பல், உமியினால் உடல் அரிப்பு , குழந்தைகள், முதியோர்களுக்கு மூச்சு திணறல் ஏற்படுகிறது. இது குறித்து மாசுக்கட்டுபாட்டு பொறியாளருக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
அரிசி ஆலைகளும் ஆவணங்களின்றி இயங்கி வருகிறது. இதன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்," என குறிப்பிட்டுள்ளார்.
பாதையில் ஆக்கிரமிப்பு
விருதுநகர் ரோசல்பட்டி ஊராட்சி அண்ணாநகர் மக்கள் அளித்த மனுவில், 'எங்கள் பகுதியில் 100 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா, 9 மீட்டர் பாதை ஒதுக்கப்பட்டது. இப்பாதையானது தங்கமணி காலனியில் உள்ள 6 மீட்டர் பொதுபாதை வழியாக சென்று விருதுநகர் மல்லாங்கிணர் நெடுஞ்சாலையுடன் இணைகிறது. இந்த இடத்தில் தனிநபர் ஆக்கிரமிப்பு செய்து 10 அடி உயர சுவரை கட்டியுள்ளார். கலெக்டர் பார்வையிட்டு பாதையை மீட்டு தர வேண்டும்,' என கேட்டுள்ளனர்.
சாத்துார் ஏழாயிரம் பண்ணை சிவசங்குபட்டி கிராமத்தினர் அளித்த மனுவில், 'சிவசங்குபட்டி அப்பாவு மகன் சிவானந்தம் கடந்த பிப். 5 இரவில் ஏழாயிரம்பண்ணைக்கு டூவீலரில் வந்து கொண்டிருந்தார்.
வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் இவரை போலீசார் ஸ்டேஷனில் வைத்து சரமாரியாக தாக்கினர். எஸ்.ஐ.,ராமசாமி, ஏட்டு காளிதாஸ், மணிகண்டன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,'என கேட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X