பொது செய்தி

தமிழ்நாடு

கண்காணிக்கலாமே! கிராமங்களில் பரவுது 'டெங்கு' காய்ச்சல் ... தேவையாகுது தீவிர தடுப்பு நடவடிக்கை

Updated : பிப் 11, 2020 | Added : பிப் 11, 2020
Advertisement

சாத்துார்:விருதுநகர் மாவட்டத்தில் கிராமங்களில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் மக்கள் பெரும் பாதிப்பை சந்திக்கின்றனர்.ஷ
மாவட்டத்தில் மர்ம காய்ச்சல் பாதிப்பு ஆங்காங்கே பல கிராமங்களில் ஏற்பட்டு வந்தது. இதை தொடர்ந்து சுகாதார ஆய்வாளர்கள் தற்காலிக பணியாளர்களை கொண்டு பல்வேறு கிராமங்களில் ஏடிஸ் கொசு ஒழிப்பு மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
எனினும் கடந்த சில வாரங்களாக கிராமங்களில் மர்ம காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. சாத்துார் அருகே திருவிருந்தான் பட்டி, சுப்பிரமணியபுரம் இருக்கன்குடி, கே மேட்டுப்பட்டி, படந்தால் உள்ளிட்ட பகுதிகளில் மர்ம காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இப்பகுதிகளில் நிலவும் சுகாதார சீர்கேட்டை தடுக்க அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறிப்பாக நல்ல தண்ணீரில் மட்டுமே வளரும் ஏடிஸ் கொசுக்கள் முழுமையாக அழித்தால் மட்டுமே டெங்கு காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த முடியும். குடிநீர் தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் பாத்திரங்களில் தண்ணீரை பிடித்து வைப்பதால் டீஸ் கொசு உற்பத்தியாகிறது. நீண்ட நாட்களாக தண்ணீரை மாற்றாமல் பாத்திரத்தை சுத்தம் செய்யாமல் வைப்பதால் இது போன்ற பாதிப்பு ஏற்படுகிறது.
டெங்கு மற்றும் மர்ம காயச்சல் பாதிப்பால் பலர் அவதிப்படும் நிலையில் கிராமங்களில் சுகாதார பணிகளை முடுக்கிவிட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தேவை நடவடிக்கை
சுகாதார ஆய்வாளர்கள், தற்காலிக பணியாளர்கள் வீடுகளுக்கு வந்து பெயரளவிற்கு சோதனை செய்கின்றனர் பலர் வீடுகளை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுவிடுவதால் கொசுவை கட்டுப்படுத்த முடியவில்லை. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கொசு ஒழிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும். பலர் டெங்கு, மர்ம காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகி தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள கிராமங்களில் சிறப்பு மருத்துவ முகாம் அமைத்து பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்.- மொராஜி, வியாபாரி, சாத்துார்


'டெங்கு'இல்லைசாத்துார் படந்தால் முத்துராமலிங்கபுரம் பகுதியில் தான் காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ளது. பொதுமக்கள் வீடுகளை சோதனையிட அனுமதிப்பதில்லை. இதனால் பாதிப்பு அதிகமாக உள்ளது. இது சாதாரண வைரஸ் காய்ச்சல் தான். டெங்கு இல்லை. போத்தி ரெட்டிபட்டியில் டெங்குவால் ஒருவர் தான் பாதிக்கப்பட்டார். அவரும் குணமடைந்துவிட்டார்.- செல்வராஜ், வட்டார சுகாதார அலுவலர், சாத்துார்.



Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X