சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நூல் 'கோன்' அட்டை குடோனில் தீ விபத்து :பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்

Added : பிப் 11, 2020
Advertisement
 நூல் 'கோன்' அட்டை குடோனில் தீ விபத்து :பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்

திருப்பூர்:சிட்கோ அருகிலுள்ள நுால் கோன் அட்டை நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டு, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள் சேதமடைந்தது.துாத்துக்குடியைச் சேர்ந்தவர், துரைபாண்டி, 45. இவர், திருப்பூர், முதலி பாளையம் சிட்கோ அருகே, மீனாட்சி நகரில், நுால் கோன் அட்டை, தையல் கோன் அட்டை குடோன் வைத்துள்ளார். இந்த குடோனில் நேற்று மதியம் திடீரென தீப்பிடித்து எரிந்தது.அருகில் இருந்தவர்கள் தீயை அணைக்க முயன்றும் முடியவில்லை. தெற்கு தீயணைப்பு நிலைய அலுவலர் சண்முகம் தலைமையிலான தீயணைப்பு துறையினர், இரண்டு தீயணைப்பு வாகனங்களில் சென்று, தீயை அணைத்தனர். பல லட்சம் ரூபாய் மதிப்பிலான நுால் கோன் அட்டைகள் தீயில் எரிந்து சாம்பலாகின.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X