பொது செய்தி

தமிழ்நாடு

'ஈ' மொய்க்கும் தின்பண்டங்களால் 'தீங்கு' உணவு பாதுகாப்புத்துறையினர் ஆய்வு அவசியம்

Updated : பிப் 11, 2020 | Added : பிப் 11, 2020
Advertisement

விருதுநகர்:மாவட்டத்தில் பள்ளிகள் அருகே சுகாதாரமற்ற தின்பண்டங்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சுகாதாரமற்ற இதை வாங்கி உண்பதால் மாணவர்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர்.

பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் பாட இடைவேளை , பள்ளி முடிந்ததும் பள்ளி அருகே உள்ள கடைகளில் விற்கப்படும் தின்பண்டங்களை வாங்கி சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அக்காலத்தில் பள்ளி அருகே உள்ள பெட்டிகடைகளில் நெல்லிக்காய், கொய்யா, மாங்காய், நாவல் பழம், இலந்தை பழம், பனங்கிழங்கு, பனியாரம், ஆரஞ்சு, கடலை மிட்டாய் என ஏதாவது ஒரு வகையில் சத்தான தின்பண்டங்களை மாணவர்கள் வாங்கி சாப்பிடுவார்கள்.ஆனால் இன்று லாப நோக்கை மட்டும் கொண்ட வியாபாரிகளால் கிராமங்களில் உள்ள பெட்டிகடைகளில் அதிலும் அரசுப்பள்ளிகள் அருகே உள்ள பெட்டிகடைகளில் தான் தரமற்ற சாக்லெட்டுகள்,மிக்ஸர், சிப்ஸ், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட ஜூஸ், வறுக்கப்பட்ட பொருட்கள், செயற்கை முறையில் கலரூட்டப்பட்ட ,பேக் செய்யப்பட்ட தின்பண்டங்கள் விற்கப்படுகிறது. சில கடைக்காரர்கள் காலாவதியான மிட்டாய் மற்றும் தின்பண்டங்களை காசாக்கும் நோக்கில் விற்கின்றனர்.

பிரபல நிறுவனங்களின் பெயரை வித்தியாசம் தெரியாமல் மாற்றி அதே பெயரில் பேக் செய்து போலி தின்பண்டங்கள் விற்பனை செய்வதும் சில ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. இவ்வாறு போலி தின்பண்டங்களுக்கும், நல்ல தின்பண்டங்களுக்கும் வித்தியாசம் தெரியாத குழந்தைகள் போலியானவற்றை காசு கொடுத்து வாங்கி பாதிக்கின்றனர்.



Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X