பொது செய்தி

தமிழ்நாடு

தொழிலாளர் குடும்பத்தினரிடம் தேவை, உண்மையான புரிதல்! ஸ்ரீபுரம் அறக்கட்டளை நிர்வாகி சொல்கிறார்

Added : பிப் 11, 2020
Advertisement

திருப்பூர்:திருப்பூரில் நடந்த 'வெற்றிப்பாதையில் திருப்பூர்' நிகழ்ச்சியில், பின்னலாடைத்துறை தொழிலில் சிறக்க தேவையான அம்சங்கள் குறித்து தொழில் வல்லுனர்கள் விளக்கினர்.ஸ்ரீபுரம் அறக்கட்டளை ஒளிவிளக்கு திட்ட ஒருங்கிணைப்பாளர் சுந்தரேசன் கூறியதாவது:கருத்தரங்கில் வல்லுனர்கள் கூறியபடி, பின்னலாடை நிறுவனங்கள் தங்களை சுய பரிசோதனை செய்யவேண்டும். குறைகளை கண்டறிந்து, நிவர்த்தி செய்யவேண்டும்.
தொழிலாளர் பற்றாக்குறை மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. நிறுவனங்கள், மனிதவள மேம்பாட்டு துறையின் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.தொழிலாளரை பணி அமர்த்துவது, ஆவண பாதுகாப்புடன் மனிதவள துறையின் பணி நிறைவடைந்துவிட்டதாக கருதக்கூடாது. சொந்த ஊர், உறவினர்களைவிட்டு, திருப்பூருக்கு வருவோர், புதிய இடம், பணிச்சூழலை பழகிக்கொள்வதற்கு கால அவகாசம் தேவைப்படுகிறது.திருப்பூரில் பணிபுரிந்தால், எதிர்கால வாழ்க்கை சிறப்பாக அமையும் என்கிற நம்பிக்கையை நிறுவனங்கள், தொழிலாளர்களுக்கு ஊட்டவேண்டும். தொழிலாளர் மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்துவது மிகவும் அவசியம்.டில்லி சர்வதேச ஆலோசகர் ராஜேஷ்பேடா கூறியபடி, மேலாளர்கள், மேற்பார்வையாளர் போன்ற, நிர்வாகத்துக்கும் தொழிலாளருக்கும் இடையே உள்ள, இடைநிலை நிர்வாக பணியாளர்களின் செயல்பாடுகளை கண்காணித்து, பயிற்சி அளித்து சீர்படுத்த வேண்டும்.சிறந்த அமைதியான பணிச்சூழலை உருவாக்கிக்கொடுக்கவேண்டும். இதன்மூலம், தொழிலாளர் இடைநிற்றல் விகிதம் குறையும்; பின்னலாடை நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள தொழிலாளர் பற்றாக்குறை பிரச்னையும் படிப்படியாக விலகும். சிறந்த தொழிலாளர்களை, நிறுவனங்கள், தக்கவைத்துக்கொள்ளவேண்டும்.
தென்மாவட்டங்களில், படித்த, படிக்காத வேலை இல்லாத இளைஞர்கள் அதிகம் உள்ளனர். திருப்பூர் குறித்த எதிர்மறை கருத்துக்கள் பரவியுள்ளதால், பலரும் திருப்பூர் வர தயங்குகின்றனர். திருப்பூர் குறித்த நேர்மறை கருத்துக்களை பரவச்செய்யவேண்டும்.
தொழிலாளர்களின் பெற்றோர் உள்ளிட்ட குடும்ப அங்கத்தினர் மத்தியிலும், திருப்பூர் குறித்த உண்மையான புரிதலை ஏற்படுத்தவேண்டும். இதன்மூலம், தொழிலாளர்கள் திருப்பூரைவிட்டு விலகிச்செல்ல நினைத்தாலும், குடும்பத்தினர் தொடர்ந்து பணிபுரியவேண்டுமென அறிவுறுத்துவர்.கருத்தரங்கில் கூறப்பட்ட ஆலோசனைகளை கடைபிடித்து, தங்கள் நிறுவனத்தையும், திருப்பூர் பின்னலாடை துறையையும் வளர்ச்சிப்பாதையில் அழைத்துச்செல்லவேண்டிய பொறுப்பு, ஒவ்வொரு தொழில்முனைவோருக்கும் உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X