சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மார்க்கெட் இடம் மாற்ற எதிர்ப்பு: வியாபாரிகள் உண்ணாவிரதம்

Added : பிப் 11, 2020
Advertisement

திருப்பூர்:'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், பழைய பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள தினசரி மார்க்கெட்டை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து, மார்க்கெட் வியாபாரிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.திருப்பூர் காமராஜர் ரோட்டில் பழைய பஸ் ஸ்டாண்ட் எதிரில், தினசரி மார்க்கெட் செயல்படுகிறது. ஏறத்தாழ, 2.25 ஏக்கரில், 436 கடைகள் செயல்படுகிறது.'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், இந்த இடத்தில், 29 கோடி ரூபாய் மதிப்பில் புதிய வணிக வளாகம் அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்காக, தினசரி மார்க்கெட்டுக்கு, பல்லடம் ரோட்டில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூட வளாகத்தில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக் கப்பட்டது.இச்சூழலில், தினசரி மார்க்கெட்டை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து, திருப்பூர் மார்க்கெட் வியாபாரிகள் சங்கத் தினர், கலெக்டர், மாநகராட்சியினரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.அதிகாரிகள் தரப்பில், மார்க்கெட் வியாபாரிகளுடன் எவ்வித பேச்சும் நடத்தாமல், கலந்து ஆலோசிக்காமல் இடமாற்றம் செய்ய அறிவுறுத்துவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று வியாபாரிகள் சங்கத்தினர் குற்றம்சாட்டினர்.உண்ணாவிரத போராட்டம்வணிக வளாகம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் சார்பில், அனைத்து கடைகளையும் அடைத்து, உண்ணாவிரதப் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். தலைவர் பாலசுப்ரமணியம், முன்னாள் தலைவர் தங்கமுத்து, செயலாளர் முருகேசன், பொருளாளர் ஆனந்தன் உள்ளிட்டோர் தலைமையில் நடந்தது.வியாபாரிகள் சங்கத்தினர் கூறுகையில், 'மார்க்கெட்டை இடமாற்றம் செய்ய மாநகராட்சியினர் உத்தரவிட்டுள்ளனர். இதனால், தொழில் பாதிக்கப்பட்டு, வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எங்களுடன் கலந்து ஆலோசிக்காமல், எவ்வித திட்டமிடலும் இல்லாமல், கட்டப்பட உள்ள வணிக வளாகத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றோம்.ஒரு வேளை பணிகளை மேற்கொண்டாலும், பகுதி வாரியாக கட்டுமான பணியை செய்ய வேண்டும். இதே இடத்தில் மார்க்கெட் நடத்த மாநகராட்சி ஏற்பாடு செய்து தர வேண்டும். புதியதாக கட்டும் கடைகளை எங்கள் வியாபாரிகளுக்கே கொடுத்திட வேண்டும்.இவ்விஷயத்தில், மாநகராட்சியினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளோம்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X