சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிக்கு வலிப்பு: ஆம்புலன்ஸ் இல்லாததால் பரிதாபம்

Added : பிப் 11, 2020
Advertisement

திருப்பூர்:திருப்பூரை சேர்ந்த மாற்றுத்திறனாளி முருகேசன் என்பவர், உதவி கேட்டு மனு கொடுக்க, கலெக்டர் அலுவலகம் வந்திருந்தார். மனு கொடுத்து விட்டு காத்திருந்த போது, திடீரென மயங்கி விழுந்ததும், வலிப்பு ஏற்பட்டது.பொதுமக்கள் ஓடிச்சென்று உதவினர். வழக்கமாக, நுாற்றுக்கணக்கான மக்கள் வந்துசெல்லும் கலெக்டர் அலுவலக வளாகத்தில், குறைகேட்பு நாளில், 'டூ வீலர்' 108 வாகனம் தயார்நிலையில் இருக்கும்.பொதுமக்களுக்கு தேவையான மருந்து, மாத்திரை வழங்கி, பரிசோதனையும் நடக்கும். கடந்த சில மாதமாக, 'டூ வீலர் '108' வாகனம் கலெக்டர் அலுவலகம் வருவதில்லை. எவ்வளவு வேலை இருந்தாலும், குறைகேட்பு நாளில், நான்கு மணி நேரம் கலெக்டர் அலுவலகத்தில் முகாமிட, கலெக்டர் உத்தரவிட வேண்டுமென, அனைவரும் வலியுறுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X