பொது செய்தி

தமிழ்நாடு

'அட... எடுக்கறாங்க அழைப்பை!' 'தினமலர்' செய்தி எதிரொலி

Added : பிப் 11, 2020
Advertisement

திருப்பூர்:'தினமலர்' செய்தி எதிரொலியால், போக்குவரத்து துறை அதிகாரிகள், பொதுமக்களின் போன் அழைப்புகளை ஏற்று, பதில் அளிக்கின்றனர்.அரசு பஸ்களின் கலெக் ஷனை அதிகரிக்க, பஸ்சுக்கான பயணிகளை கூவி அழைக்க ஆட்கள் தேவை என்ற அறிவிப்பு பழைய, புதிய பஸ் ஸ்டாண்டில் போக்குவரத்து கழகம் மூலம் ஒட்டப்பட்டிருந்தது. அதில் குறிப்பிடப்பட்டிருந்த மொபைல் போன் நம்பருக்கு தொடர்பு கொண்டால், 'நீங்கள் அழைக்கும் வாடிக்கையாளரை தற்போது தொடர்பு கொள்ள முடியாது,' என்ற பதிலே திரும்பதிரும்ப வந்தது.இது குறித்து, 'தினமலர்' திருப்பூர் நாளிதழில்நேற்று செய்தி வெளியானது. இதனால், சம்மந்தப்பட்ட செல்போன் எண்ணுக் குரிய அலுவலக பணியாளரை அழைத்த உயரதிகாரிகள் இது குறித்து எச்சரித்தனர்.இதனையடுத்து, அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்த செல்போன் எண் நேற்று காலை செயல்பாட்டுக்கு வந்தது. இதனால் ஒரே நாளில், 25 அழைப்புகள் பணி வாய்ப்பு கேட்டு வந்தன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X