பொது செய்தி

தமிழ்நாடு

'குடிசைக்கு இடம் கொடுங்க!'

Added : பிப் 11, 2020
Advertisement

திருப்பூர்:திருப்பூர், இடுவம்பாளையத்தில் வசிப்பவர் சந்திரசேகர், 80; இவர் மனைவி ஜோதி, 70; இவர்களது மகன் அசோக்பாபு, 37; மாற்றுத்திறனாளி. மனநலம் பாதித்த மாற்றுத்திறனாளி மகனை வைத்திருப்பதால், வாடகைக்கு வீடு கிடைக்காமல், இடுவம்பாளையம் அருகே குடிசையில் வசிக்கின்றனர்.வயதாகிவிட்டதாலும், சந்திரசேகருக்கும் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாலும், ஜோதி மிகவும் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார். அரசு திட்டங்களின் மூலம், எங்களுக்கு குடிசை போடும் அளவுக்கு, மனை வழங்கினால், யாருக்கும் பாதிப்பு இல்லாமல், இறுதிகாலத்தை கழிப்போம் என, நேற்று கலெக்டர் அலுவலகத்தில் முறையிட்டனர்.ஜோதி கூறுகையில், ''ஐந்து ஆண்டுகளாக, பலமுறை மனு கொடுத்தேன், ஏதாவது உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் மீண்டும் மனு கொடுத்திருக்கிறேன்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X