பொது செய்தி

தமிழ்நாடு

'கொரோனா' அச்சம் தேவையில்லை!

Added : பிப் 11, 2020
Advertisement
 'கொரோனா' அச்சம் தேவையில்லை!

திருப்பூர்:கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி சிக்கண்ணா அரசு கலை அறிவியல் கல்லுாரியில் நேற்று நடந்தது.மாவட்ட சுகாதார துறை, கல்லுாரி நாட்டு நலப்பணித்திட்டம் அலகு 2, இளைஞர் செஞ்சிலுவை சங்கம் இணைந்து நடத்திய நிகழ்ச்சியில் கொரோனா வைரஸ் பற்றியும், பாதுகாத்து கொள்ளும் வழிமுறைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் தீபா தலைமை வகித்தார். மாவட்ட நல அலுவலர் டாக்டர் பூபதி பேசுகையில், ''கொரோனா வைரஸ் பற்றிய அச்சம் தேவையில்லை. சீனாவில் நாளுக்கு நாள் வைரஸ் தாக்கம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்த வைரஸினால், மூச்சு திணறல் ஏற்படும். இது காற்றில் பரவக்கூடிய தொற்று நோய் கிருமி. இதிலிருந்து நம்மை பாதுகாக்க, சாப்பிடும் முன்பும், பின்பும் கைகளை நன்றாக கழுவுதல் வேண்டும்,'' என்றார்.மாவட்ட மனநல மருத்துவர் சுகன்யா தேவி பேசுகையில், ''மாணவர்கள் அனைவரும் அலட்சியமாக இல்லாமல் பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்ற வேண்டும். 'வைட்டமின் சி' நிறைந்த உணவுகளை சாப்பிடவும்,'' என்றார்.சுகாதாரத்துறை பணியாளர்கள் மருத்துவர் ஹேமா ரமா தலைமையில் கை கழுவும் ஆறு வகையான முறைகளை பற்றி செய்முறை செய்து காட்டினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X