பொது செய்தி

தமிழ்நாடு

நெருங்கும், பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் அனுப்பும் பணி துவக்கம்

Added : பிப் 11, 2020
Advertisement

திருப்பூர்:பொதுத்தேர்வு துவங்க இரண்டு வாரங்களே உள்ள நிலையில் தேர்வு மையங்களுக்கு வெற்று விடைத்தாள்களை அனுப்பும் பணி நேற்று துவங்கியது.நடப்பாண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 2ம் தேதியும், பிளஸ் 1 தேர்வு மார்ச் 4ம் தேதியும், பத்தாம் வகுப்புக்கு மார்ச் 17ம் தேதியும் துவங்குகிறது. ஏப்., 9ல் முடிவடைகிறது. இந்நிலையில் தேர்வுக்கான ஆயத்த பணிகள், தீவிரமாக நடந்து வருகின்றன. மாநிலம் முழுவதும், அடிப்படை உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு வசதிகள் உள்ள, 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்படுகின்றன.மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கான, முதன்மை வெற்று விடைத்தாள்கள் அனுப்பும் பணி துவங்கியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளுக்கு நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் விடைத்தாள்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இங்கிருந்து உடுமலை, தாராபுரம் உள்ளிட்ட அனைத்து கல்வி வட்டாரங்களுக்கும் பிரித்தனுப்பும் பணி நேற்று துவங்கியது.மாவட்ட கல்வி அதிகாரி பழனிசாமி கூறுகையில், '' விடைத்தாள்களில் பேப்பர் எண்ணிக்கை, முதல் பக்க குறிப்பேடு, சரியான முறையில் அச்சடிக்கப்பட்டுள்ளதா, தைக்கப்பட்டுள்ளதா என்பதை தலைமை ஆசிரியர்கள் சரிபார்க்க வேண்டும். தேர்வு மையங்களில் எழுத உள்ள மாணவர்களின் எண்ணிக்கை ஏற்ப விடைத்தாள் இருப்பதை உறுதி செய்வது அவசியம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X