'பட்டா கொடுத்தும் வீட்டுமனை ஒதுக்கலே!' பாதிக்கப்பட்ட பெண்கள் புலம்பல்

Added : பிப் 11, 2020
Advertisement
 'பட்டா கொடுத்தும் வீட்டுமனை ஒதுக்கலே!' பாதிக்கப்பட்ட பெண்கள் புலம்பல்

திருப்பூர்:திருப்பூர் மாவட்ட நிர்வாகம் வழங்கிய பட்டா மட்டுமே இருக்கிறது; வீட்டுமனையை ஒப்படைக்க வேண்டுமென, பெண்கள் நேற்று குறைகேட்பு கூட்டத்தில் முறையிட்டனர்.பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. டி.ஆர்.ஓ., சுகுமார் தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.l மா.கம்யூ., கட்சி நிர்வாகிகள் கொடுத்த மனுவில், 'வீரபாண்டி கிராமம், க.ச., 363/2ஏ இடத்தில், 40 ஆண்டுகளாக, 27 குடும்பங்கள் வீடு கட்டி வசிக்கின்றன; அரசு பட்டா வழங்கியுள்ளது.
விரைவில், நிலத்தை உட்பிரிவு செய்து கொடுக்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளனர்.l வெள்ளகோவில் நக ராட்சி மக்கள் கொடுத்த மனுவில், 'காளிமூப்பன்பதியில், ஜல்லிக்கற்களுடன், தார் கலவை தயாரிக்கும் நிறுவனம் இயங்குகிறது. ரசாயண நச்சுத்தன்மையுள்ள காற்று, கடும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.l 'நாச்சிபாளையம் அருகே, செந்தில்நகரில், அடிப்படை வசதி செய்துகொடுப்பதாக கூறி ஏமாற்றிவிட்டனர். அடிப்படை வசதி செய்து கொடுக்க வேண்டும்' என்று செந்தில் நகர் பொதுமக்கள் தங்கள் மனுவில் தெரிவித்துள்ளனர்.l செட்டிபாளையம் மக்கள் கொடுத்த மனுவில், 'இந்திரா நகர், சஞ்சீவி நகர் உள்ளிட்ட பகுதிகளில், 1,500 குடும்பங்கள் உள்ளன. இரண்டாவது திட்டத்தில், குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் தண்ணீர் வழங்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளனர்.l பொங்கலுார் ஒன்றியம், அலகுமலை ஊராட்சி தலைவர் துாயமணி கொடுத்த மனுவில், 'ஜல்லிக்கட்டு நடத்தியதால், ஊராட்சி பகுதி, சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. போதிய நிதி ஆதாரம் இல்லாததால், கலெக்டர் சிறப்பு நிதியில் இருந்து, துாய்மை பணிக்கு நிதி ஒதுக்க வேண்டும். அரசு சார்பில், ஊராட்சி தலைவர்களுக்கு, 'மொபைல்' போன் வழங்க வேண்டும்,' என்று தெரிவித்துள்ளார்.l அவிநாசி ஒன்றியம், கூட்டப்பள்ளி பொதுமக்கள் கொடுத்தமனுவில், 'நீண்ட நாட்களாக வசித்து வந்த நத்தம் புறம்போக்கில் இருந்து, வேறு பகுதிக்கு தற்காலிகமாக மாறினோம். அப்போது, இடைத்தரகர்கள், தங்கள் பெயருக்கு பட்டா பெற்றுள்ளனர்.
உரிமையாளருக்கே பட்டா வழங்க வேண்டும்,' என்று தெரிவித்துள்ளனர்.l திருப்பூரின் பல்வேறு பகுதியை சேர்ந்த பெண்கள் கொடுத்த மனுவில், 'பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில், 2014ல் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. காங்கயம், நிழலியில் இடம் ஒதுக்கப்பட்டது. அப்பகுதி மக்கள், ஏற்கனவே தங்களிடம் பட்டா இருப்பதாக கூறி இடையூறு செய்கின்றனர். மாற்று இடம் வழங்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளனர்.l திருப்பூர் பத்மினி கார்டன் கிருஷ்ணசாமி கொடுத்த மனுவில்,'பத்மினி கார்டனில், 10 ஏக்கர் பரப்பில் குளம் உள்ளது. குளத்துக்கு வரும் வாய்க்காலை கண்டறிந்து, அகலப்படுத்தினால் மட்டுமே, மழைநீர் குளத்துக்கு வரும்' என்று தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X