மாவட்ட டென்னிஸ்: அரையிறுதியில் கனிஷ்கா - காயத்ரி

Added : பிப் 11, 2020
Advertisement

கோவை:மாவட்ட அளவிலான டென்னிஸ் போட்டியில், கனிஷ்கா மற்றும் காயத்ரி ஆகியோர் அரையிறுதிப்போட்டிக்கு, தகுதிபெற்றனர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (கோவை) சார்பில், முதல்வர்கோப்பைக்கான மாவட்ட அளவிலான டென்னிஸ் போட்டி, குணா ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸ் மைதானத்தில் நடந்தது.ஆண்கள் பிரிவில், 23 பேரும், பெண்கள் பிரிவில் 7 பேரும் போட்டியில் பங்கேற்றனர். நேற்று நடந்த மாணவர்களுக்கான தகுதி சுற்று முதல் போட்டியில், நிதின், 8-5 என்ற புள்ளி கணக்கில், ஹேமன்யாவையும்; 2வது போட்டியில், தருண்விக்ரம், 8-5 என்ற புள்ளி கணக்கில், ஹர்ஷவர்தனையும் வென்றனர். 3வது போட்டியில், அரவிந்த், 8-7 என்ற புள்ளி கணக்கில், கனிஷ்கனையும்; 4வது போட்டியில், சரண்திபக், 8-5 என்ற புள்ளி கணக்கில், ராகேஷ் குமாரையும் வென்றனர். வெற்றி பெற்ற வீரர்கள்,அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றனர். மாணவியர் பிரிவுமுதல் காலிறுதிப்போட்டியில், கனிஷ்கா, 8-6 என்ற புள்ளி கணக்கில், தினேஷ் தர்ஷனாவையும்; 2வது போட்டியில், காயத்ரி, 8-5 என்ற புள்ளி கணக்கில், சுருதியையும்; 3வது போட்டியில், தன்விகா, 8-3 என்ற புள்ளி கணக்கில், நிவேதாவையும் வென்றனர்.வெற்றி பெற்ற வீராங்கனைகள், அரையிறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X