ஜூடோ; ஆர்.வி.எஸ்., அசத்தல்

Added : பிப் 11, 2020
Advertisement

சூலுார்;மாநில அளவிலான ஜூடோ போட்டியில்ஆர்.வி.எஸ்.,பள்ளி மாணவர்கள் பதக்கம் பெற்றுஅசத்தினர்.தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில், மாநில அளவிலான ஜூடோ போட்டி கரூரில் நடந்தது. பல்வேறு பிரிவுகளில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். சூலூர் ஆர். வி. எஸ்., மெட்ரிக் பள்ளி மாணவர்கள் இருவர் வெற்றி பெற்றனர்.17 வயதுக்குட்பட்ட பிரிவில், சூரஜும், 14 வயதுக்குட்பட்ட பிரிவில் நவீனும் பங்கேற்று, வெண்கலப்பதக்கம் மற்றும் ரொக்கப்பரிசு பெற்றனர்.கடந்த ஏழு ஆண்டுகளாக பயிற்சி பெற்று, பதக்கம் பெற்ற மாணவர்களை, பள்ளி நிர்வாகத்தினர், முதல்வர், ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் பயிற்சியாளர் சிவம் ஆகியோர் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X