பொது செய்தி

தமிழ்நாடு

செவித்திறன் குறைபாடு மாணவர்கள் தேசிய போட்டியில் சாதனை

Added : பிப் 11, 2020
Advertisement

விருதுநகர்:செவித்திறன் குறைபாடுடைய மாணவர்களுக்கான தேசிய அளவிலான போட்டிகள் மும்பையில் நடந்தது.
இந்தியாவில் இருந்து பல்வேறு பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். சிவகாசி சி.எஸ்.ஐ., செவித்திறன் குறையுடையோர் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் 29 பேர் தடகள போட்டிகளில் கலந்து கொண்டு 9 தங்கம், 4 வெள்ளி, 11 வெண்கலம் என 24 பதக்கங்களை பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளனர். ஆண்கள் பிரிவில் தினகரன் 100 மீ., 200 மீ.,400 மீ., போட்டியில் தங்கம் வென்று சிறந்த தடகள வீரர் என்ற விருதை பெற்றார். நடனப்போட்டியில் இப்பள்ளி மாணவர்கள் இரண்டாம் இடம் பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவர்களை கலெக்டர் கண்ணன் பாராட்டினார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயசீலி, பள்ளி தாளாளர் சாலமோன், தலைமையாசிரியர் பால்ராஜ் உடனிந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X