பொது செய்தி

தமிழ்நாடு

அடிப்படை வசதி மேம்படுத்தணும் பேரூராட்சியில் பழங்குடியினர் மனு

Added : பிப் 11, 2020
Advertisement

ஆனைமலை:பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு சுற்றுப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின கிராமங்களில், அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டுமென வலியுறுத்தி, பேரூராட்சியில் பழங்குடியினர் மனு கொடுத்தனர்.
கோட்டூர் பேரூராட்சி அலுவலகத்தில், ஆழியாறு பகுதி பழங்குடியின மக்கள் மனு கொடுத்தனர். மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் பரமசிவம், ஒன்றிய தலைவர் அமாவாசை தலைமையில், பழங்குடியினர் மனு கொடுத்தனர்.பேரூராட்சி செயல் அலுவலர் வில்லியம் ஜேசுதாஸ் மனுவை பெற்றுக் கொண்டு, நடவடிக்கை எடுக்கப்படுமென உறுதியளித்தார்.மனுவில் கூறியிருப்பதாவது:கோட்டூர் பேரூராட்சிக்கு உட்பட்ட, புளியங்கண்டி கிராமத்தில், குடிநீர் வினியோகத்தை சீர்படுத்த வேண்டும். தேவைக்கேற்ப குடிநீர் வழங்க வேண்டும்.கழிப்பிட வசதி இல்லாததால், மக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். இயற்கை உபாதைகளை கழிக்க வனத்தினுள் செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. பழங்குடியினர் நலனுக்காக கழிப்பிட வசதி ஏற்படுத்த வேண்டும்.ஆழியாறு அன்பு நகர் கால்வாய் அருகே வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு, கூடுதல் குடிநீர் குழாய் அமைத்துத்தர வேண்டும். சோலார் விளக்குகள் அமைத்து, கழிப்பிட வசதி ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X