பொது செய்தி

தமிழ்நாடு

ஸ்கூட்டர் மானிய இலக்கு அலைமோதும் அலுவலர்கள்

Added : பிப் 11, 2020
Advertisement

பொள்ளாச்சி;தாழ்த்தப்பட்ட பெண் களுக்கு ஸ்கூட்டர் மானியம் வழங்க, அரசு அழுத்தம் அளிப்பதால், பயனாளிகளை தேடி அலுவலர்கள் அலைமோதுகின்றனர்.
தமிழக அரசு சுயதொழில் புரியும், பணியாற்றும் பெண்களுக்கு ஸ்கூட்டர் வாங்க மானியம் அளிக்கும் திட்டத்தை கடந்த மூன்றாண்டுகளாக செயல்படுத்துகிறது.ஸ்கூட்டர் விலையில், 50 சதவீதம் அல்லது, 25,000 ரூபாய் எது குறைவோ அது மானியமாக வழங்கப்படுகிறது. மகளிர் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், தகுதியுள்ள பயனாளிகளை தேர்வு செய்து, மானியம் வழங்குகின்றனர்.நடப்பாண்டில், தெற்கு ஒன்றியத்தில், 119 பயனாளிகளுக்கு மானியம் வழங்க இலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதில், 20 சதவீதம் தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்கீடு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த கணக்கீட்டின் படி, 24 தாழ்த்தப்பட்ட பயனாளிகள் தேர்வு செய்யப்பட வேண்டும். ஆனால், கடந்த மூன்றாண்டுகளாகவே தாழ்த்தப்பட்ட பிரிவுக்கான இலக்கு எட்டப்படாததால், அதை ஈடு செய்ய, நடப்பாண்டில் இலக்கு, 44 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.ஆனால், தாழ்த்தப்பட்ட பெண்கள், ஸ்கூட்டர் வாங்க அதிக ஆர்வம் காட்ட முடியாததால், இலக்கை எட்ட முடியாமல் அதிகாரிகள் திணறுகின்றனர். நிதியாண்டு முடிய இரண்டு மாதம் மட்டுமே உள்ள நிலையில், இதுவரை, 10க்கும் குறைவானோரே மானியத்துக்கு விண்ணப்பித்துள்ளனர்.இலக்கை ஆண்டு முடிவற்குள் எட்ட, அரசு தரப்பில் அழுத்தம் அளிக்கப்படுவதால், தகுதியுள்ள பயனாளிகளை தேடி, அலுவலர்கள் கிராமம் கிராமமாக அலைமோதுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X