சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காங்., அலுவலகத்துக்கு 'சீல்' ஆர்.டி.ஓ., விசாரிக்க உத்தரவு

Added : பிப் 11, 2020
Advertisement

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், காங்., கட்சி பெயரில் உள்ள பழைய அலுவலக கட்டடத்துக்கு 'சீல்' வைக்கப்பட்டு, ஆர்.டி.ஓ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
கோவை தெற்கு மாவட்ட காங்., கட்சி அலுவலகம், வெங்கடேசா காலனியில் வாடகை கட்டடத்தில் செயல்படுகிறது. ஆனால், ஆரம்ப கால கட்சி அலுவலகம், வெங்கட்ரமணன் வீதியில் செயல்பட்டு வந்தது. 1965களில், காங்., கட்சி உடைந்து, ஸ்தாபன காங்., தோன்றியபோது, கட்டடத்தை ஸ்தாபன காங்., தனதாக்கிக்கொண்டது.அதனை தொடர்ந்து, கட்டடம் ஜனதாதளம் வசம் சென்றது. இந்நிலையில், தெற்கு மாவட்ட காங்., கட்சியினர் அந்த அலுவலகத்தை கேட்டு வந்தனர். ஜனதாதளம் கட்சி, கட்டடத்தை தர மறுத்து வந்தது.இரு நாட்களுக்கு முன்பு, தெற்கு மாவட்ட காங்., பிரமுகர்கள், திடீரென பழைய கட்டடத்தை கைப்பற்றி, சொந்தம் கொண்டாடினர். தகவல் அறிந்த ஜனதாதளம் கட்சியினர், கட்சி அலுவலகம் சென்று, அங்கிருந்த காங்., பிரமுகர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதுபற்றி, பொள்ளாச்சி வருவாய்துறை அதிகாரியிடம் புகார் செய்யப்பட்டது. வருவாய்த்துறை அதிகாரிகள், காங்., கட்சியினர் கைப்பற்றிய அலுவலகத்துக்கு 'சீல்' வைத்தனர்.இரு கட்சியினரும், ஒரே அலுவலகத்துக்கு போராட்டம் நடத்துவதால், கட்டடம் யாருக்கு சொந்தம் என்பது குறித்து, ஆர்.டி.ஓ.,விசாரணைக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X