பொது செய்தி

தமிழ்நாடு

காலநிலை ஆராய்ச்சி மையம் விவசாயிகளுக்கு 'அட்வைஸ்'

Added : பிப் 11, 2020
Advertisement

ஆனைமலை:கோவை மாவட்டம் முழுவதிலும், கொளுத்தும் வெயில், வாட்டும் பனியை சமாளிக்க, விவசாயிகளுக்கு வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையத்தினர் அறிவுரை வழங்கி உள்ளனர்.
கோவை, வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்டு உள்ள அறிக்கை:வறண்ட வானிலையுடன், வெப்பநிலை அதிகமாக உள்ளதால் பயிர்களுக்கு போதிய அளவில், மண்ணின் ஈரப்பதத்தை பொறுத்து நீர் பாய்ச்ச வேண்டும். சாகுபடி செய்யப்பட்டுள்ள மஞ்சள் கிழங்கு முதிர்வடையும் நிலையில் இருப்பதால், குறைவாக நீர் பாய்ச்ச வேண்டும்.காற்றின் வேகம் அதிகமாக உள்ளதால், ஏழு மாதத்துக்கு மேற்பட்ட வாழைக்கு முட்டு கொடுக்க வேண்டும். ஐந்து மாத வாழைக்கு உரமிட்டு தண்ணீர் பாய்ச்சவும்.
பகல் நேரத்தில் அதிக வெப்பநிலை நிலவுவதால், கால்நடைகளுக்கு நாவறட்சியை போக்க, போதிய அளவில் சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும்.மாடுகளுக்கு மடிவீக்க நோய் ஏற்படுவதை தவிர்க்க, பால் கறக்கும் முன் மற்றும் கறந்த பின்பு, 'பொட்டாசியம் பெர்மாங்கனேட்' கலந்த தண்ணீரை கொண்டு மடியை சுத்தம் செய்ய வேண்டும். மாடுகளை கட்டும் இடத்தில், 'பிளீச்சிங் பவுடர்' மூலம் சுத்தம் செய்ய வேண்டும்.இவ்வாறு, அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X