பொது செய்தி

தமிழ்நாடு

ஸ்ரீ ஐயப்பன் கோவிலில் மண்டலாபிேஷக பூஜை

Added : பிப் 11, 2020
Advertisement

உடுமலை:குடிமங்கலம், சோமவாரப்பட்டி ஊராட்சி ஐயப்பன் கோவிலில், மண்டலாபிேஷக பூஜைகள் துவங்கியது.
உடுமலை அருகே குடிமங்கலம் சோமவாரப்பட்டியில் ஸ்ரீ ஐயப்பன் கோவில் உள்ளது. இக்கோவில், கும்பாபிேஷகத்தையொட்டி, கடந்த மாதம் 20ம் தேதி முளைப்பாலிகை போடப்பட்டது.கடந்த 5ம் தேதி காலை, 10:00 மணிக்கு கணபதி பூஜை, லட்சுமி பூஜை நடந்தது. மறுநாள், இரண்டாம் கால யாக பூஜை, கோபுர கலசம் நிறுவுதல் நிகழ்ச்சிகள் நடந்தன. கடந்த 7ம் தேதி காலை, 7:20 மணிக்கு நான்காம் கால யாக பூஜை, காலை, 9:00 மணிக்கு கலசங்கள் புறப்பட்டு, கோபுர கலசம் மற்றும் கணபதி, மற்றும் ஐயப்பசுவாமிகளுக்கு கும்பாபிேஷகம் நடந்தது. தொடர்ந்து அபிேஷகம், தீபாராதனை நடந்தது.கோவிலில், 48 நாட்களுக்கு மண்டல பூஜை துவங்கி நடந்து வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ ஐயப்ப சுவாமி கோவில் அறக்கட்டளை, பக்தர்கள், ஊர்பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X