பி.எட்., கல்லூரிகளுக்கான தடகளம்: எதிரணிக்கு 'பாடம்' எடுத்த வீரர்கள்

Added : பிப் 11, 2020
Advertisement

கோவை:நேரு ஸ்டேடியத்தில் நடந்த மாவட்ட கல்வியியல் கல்லுாரி மாணவர்களுக்கான தடகள போட்டியில், வீரர், வீராங்கனைகள் உற்சாகத்துடன் பங்கேற்றனர். சரவணம்பட்டி, பி.பி.ஜி., கல்வியியல் கல்லுாரியின் சார்பில், மாவட்ட கல்வியியல் கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கான தடகள போட்டி, கோவை நேரு ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. கோவை, நீலகிரி பகுதிகளில் உள்ள,18 கல்லுாரிகளிலிருந்து, 100க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். வீரர்களுக்கான, 100மீ., 200மீ., 400மீ., 800மீ., நீளம்தாண்டுதல், வட்டுஎறிதல், குண்டுஎறிதல், தொடர்ஓட்டம் உள்ளிட்ட பிரிவுகளில், போட்டிகள் நடந்தன. போட்டியை, மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன் துவக்கி வைத்தார். பி.பி.ஜி., கல்வி குழுமங்களின் தலைவர் தங்கவேலு, தாளாளர் சாந்தி, முதல்வர் சித்ரா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மாணவியர் பிரிவு 100மீ., ஓட்ட போட்டியில், ஜாய்சி, அமிர்தா, வீரலட்சுமி; நீளம் தாண்டுதலில் ஹர்ஷா, பாண்டி அம்மாள், அஞ்சலி ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கு, கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X