பா.ஜ., - எம்.பி.,க்கள் மீண்டும் சர்ச்சை பேச்சு

Updated : பிப் 11, 2020 | Added : பிப் 11, 2020 | கருத்துகள் (31)
Share
Advertisement
பா.ஜ., - , எம்.பி.,க்கள் மீண்டும் சர்ச்சை ,பேச்சு

இந்த செய்தியை கேட்க

அலிகார் : உருது பெண் கவிஞர் மகளை, பாகிஸ்தான் செல்லும் படியும், மக்களின் உடையை பார்த்து நாட்டின் பொருளாதாரத்தை அறிந்து கொள்ளலாம் என்றும், பா.ஜ., - எம்.பி.,க்களின் பேச்சு, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன.

உத்தர பிரதேச மாநிலம், அலிகாரில், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், முன்னணி உருது கவிஞர் முனாவ்வர் ராணாவின் மகளும், சமூக ஆர்வலருமான சுமையா ராணா பேசுகையில், ''குடியுரிமை திருத்தசட்டத்திற்கு எதிரான போராட்டங்களை நசுக்கும் வகையில், உ.பி., அரசு, போலீசார் உதவியுடன் அடக்குமுறையை கையாள்கிறது.


latest tamil news''இதனால் மக்கள் சுதந்திர காற்றை சுவாசிக்க முடியாத இறுக்கமான நிலை உள்ளது,'' என்றார்.

இதற்கு பதிலடி அளிக்கும் வகையில், அலிகார் தொகுதி பா.ஜ., - எம்.பி., சதீஷ் கவுதம் கூறியதாவது:சுமையா ராணா, நம் நாட்டில் சுதந்திரமாக இருக்க முடியாத நிலையை உணர்ந்தால், அவர் பாகிஸ்தானுக்கு செல்லட்டும்.அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்களில், ௧௫௦ பேர் மட்டும், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்; மற்றவர்கள் வகுப்புகளுக்கு திரும்பியுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள், அடுத்த கல்வியாண்டில் கல்லுாரியில் இருக்க மாட்டார்கள்.இவ்வாறு, அவர் கூறினார்.
இதே போல, உத்தர பிரதேசத்தின், பல்லியாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பா.ஜ., -- எம்.பி., வீரேந்திர சிங் மாஸ்ட் பேச்சும் சலசலப்பை ஏற்படுத்திஉள்ளது. அந்த நிகழ்ச்சியில், பேசிய வீரேந்திர சிங் மாஸ்ட், 'உலகளவில் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டிருந்தாலும், இந்தியா அதில் பாதிக்கப்படவில்லை என்பதை, நாம் அணியும் உடைகளில் இருந்து அறியலாம்' என்று கூறினார்.

''பொருளாதார மந்த நிலை இருந்தால், வேட்டி - குர்தாவுடன் தான் இருந்திருப்போம்; இப்போது போல, கோட், ஜாக்கெட் அணிந்திருக்க மாட்டோம். ''நம் நாட்டில், 6.5 லட்சம் கிராமங்கள் உள்ளன. வங்கிகளில், டிபாசிட் செய்யப்படும் பணத்தில் பெருமளவு, கிராம மக்களுக்கு சொந்தமானது,'' என்றும், அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெற்றிக்கொடிகட்டு. - -மதராஸ்:-),இந்தியா
11-பிப்-202020:45:57 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு. வளர்ப்பு சரியில்லை
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
11-பிப்-202016:49:43 IST Report Abuse
Endrum Indian அது என்ன எப்போ பார்த்தாலும் மீடியா பி ஜெ பி ஆளுங்கள் ஒண்ணு சொன்னால் அது சர்ச்சையான பேச்சு என்று சொல்வது அதுவே தண்டக்கருமாந்திரம் ஒண்ணு பிரதமர் திருடன் என்று சொல்வது???இல்லே கழுதை ஒண்ணு எப்போ பார்த்தாலும் ஏதாவது உளறுவது ?????அப்போ மட்டும் அதை அவ்வளவாக பெரிதாக சொல்லாமல் இப்போ மட்டும் என்ன இப்படி சொல்லுவது மீடியா??????என்ன மீடியா ரொம்ப தான் அவனுங்க பணம் பெட்டி பெட்டி யாக கொடுத்துவிட்டார்கள் பி ஜெ பி கொடுக்கவில்லை என்றா இப்படி சொல்வது????
Rate this:
Cancel
11-பிப்-202015:33:16 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் சரியாக தான் பேசியிருக்கிறார்கள் , போராட்டம் பண்ணும் மங்கிகளை குறித்துவைத்து கொள்ளுங்கள். பிறகு வைக்கலாம் ஆப்பு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X