மாவட்ட ஜூடோ; தகுதி போட்டி நிறைவு

Added : பிப் 11, 2020
Advertisement

சரவணம்பட்டி:கோவை மாவட்ட ஜூடோ சங்கம் சார்பில், முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான சாம்பியன்ஷிப் போட்டி நேற்று நடந்தது.மாநில அளவில் நடக்கவிருக்கும் முதல்வர் கோப்பைக்கான ஜூடோ போட்டி, முதல் கட்டமாக மாவட்ட அளவில் நடைபெற்று வருகிறது. கோவை மாவட்டத்தில், சரவணம்பட்டியில் உள்ள விவேகம் பள்ளியில் மாவட்ட அளவிலான ஜூடோ போட்டி நேற்று நடந்தது. எம்.எல்.ஏ., ஆறுக்குட்டி துவக்கி வைத்தார்.35 மாணவிகளும் 45 மாணவர்களும் பங்கேற்றனர். 7 பிரிவுகளில் நடக்கும் இந்தப் போட்டியில், 19 வயது முதல் 25 வயது வரை உள்ள மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.மாவட்ட அளவில் முதலிடம் பெறும் மாணவ, மாணவியருக்கு, தலா ஆயிரம் ரூபாய் முதல் பரிசாகவும், இரண்டாம் பரிசாகரூ.250ம் மூன்றாம் பரிசாக ரூ.500ம் வழங்கப்படுகிறது. இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் மாணவருக்கு, ஒரு லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படும்.மாவட்ட அளவில் முதலிடம் பெறும் மாணவர்கள் மட்டுமே, மாநில அளவில் நடக்கவிருக்கும் இறுதிப் போட்டியில் கலந்து கொள்ள முடியும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X