பொது செய்தி

தமிழ்நாடு

வன எல்லை கிராமங்களில் அமைக்க எதிர்பார்ப்பு... சோலார் வேலி! பயிர்களை சேதப்படுத்தும் விலங்குகளால் அச்சம்

Added : பிப் 11, 2020
Advertisement

உடுமலை:வன எல்லை கிராமங்களுக்குள் புகுந்து, வன விலங்குகள், விவசாயப்பயிர்கள் மற்றும்மனிதர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி வருவதால், சோலார் வேலி அமைக்க வேண்டும்,என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை, அமராவதி வனச்சரக பகுதிகளில் ஏராளமான வன விலங்குகள், பறவைகள் உள்ளிட்ட பல்லுயிரினங்கள் வசிக்கின்றன.
மேற்கு தொடர்ச்சிமலைப்பகுதிகளில், கடந்த நான்கு மாதமாக மழையில்லாததால், கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது.இதனால், உணவு மற்றும் குடிநீர் தேடி, வன விலங்குகள் வெளியேறி வருகின்றன. வன எல்லை கிராமங்களுக்குள் புகுந்து, விவசாயப்பயிர்களை சேதப்படுத்தி வருவதோடு, விவசாயிகள் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தி வருகிறது.கல்லாபுரம், மானுப்பட்டி, சின்னக்குமாரபாளையம், பொன்னாலம்மன் சோலை, ஜிலேபிநாயக்கன்பாளையம், ஜல்லிபட்டி, கொங்குரார் குட்டை, வலையபாளையம், தேவனுார்புதுார், ராவணாபுரம் என மேற்கு தொடர்ச்சிமலை மலையடிவாரத்திலுள்ள, கிராமங்களுக்குள் காட்டு யானைகள் புகுந்து, 30க்கும் மேற்பட்ட தென்னை, வாழை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.
அதே போல், வனத்திலிருந்து, 20 கி.மீ., துாரம் வரை பரவியுள்ள காட்டுப்பன்றிகளால், ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், செந்நாய்க்கூட்டம், சிறுத்தை என, வன விலங்குகள் கிராமங்களுக்குள் புகுந்து, ஆடு, மாடுகளை கடித்து வருகின்றன.வனத்தை விட்டு, விலங்குகள் வெளியேறுவதைத்தடுக்க, வனத்துறை சார்பில், அகழி மற்றும் ஒரு பகுதிகளில், சோலார் மின் வேலிகள் அமைக்கப்பட்டன.
தொடர் பராமரிப்பு இல்லாததால், மண் மூடி அகழிகள் அழிந்தன. கண்காணிப்பு, பராமரிப்பு இல்லாததால், சோலார்பேனல், பேட்டரி மற்றும் கம்பிகள் சேதமடைந்தும், பல இடங்களில் திருடப்பட்டன.இதனால், விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். விவசாயிகள் தங்கள் சொந்த நிலங்களில், அமைத்துள்ள சோலார் மின்வேலிகள் பகுதியில் வன விலங்குகள் வருகை குறைந்துள்ளன.எனவே, வன எல்லை கிராமங்களில், சோலார் வேலி அமைக்க நிதி ஒதுக்க வேண்டும். வனத்துறை மற்றும் விவசாயிகளைக்கொண்ட குழு அமைத்து, மின் வேலி அமைக்கவும், பராமரிக்கும் திட்டத்தை செயல்படுத்தினால், வன விலங்குகளின் பாதிப்பு ஏற்படாது என, விவசாயிகள் தமிழக முதல்வர், மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளுக்கு மனு அனுப்பியுள்ளனர்.
விவசாயிகள் சங்க மாவட்ட துணைத்தலைவர் பரமசிவம் கூறியதாவது :வன எல்லை பகுதிகளில், விவசாயிகள், மக்கள் குடியிருப்புகள் உள்ளன. யானைகள், காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட வன விலங்குகளால், பயிருக்கு பாதிப்பும், விவசாயிகள், கால்நடைகள் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்படுகிறது.தற்போது, வன விலங்குகள் எண்ணிக்கை பல மடங்கு பெருகியுள்ளதால், தென்னை, மா, மக்காச்சோளம், காய்கறி பயிர்கள், நெல், கரும்பு உள்ளிட்ட பயிர்களை அழித்து வருகின்றன.
எனவே, வன எல்லை பகுதிகளில் சோலார் மின் வேலிகள் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவை, தரமானதாகவும், உறுதியாகவும் நீண்ட காலம் பயன் அளிக்கும் வகையில் அமைக்க வேண்டும். விவசாயிகள் குழு அமைத்து, அவர்கள் மூலம் அமைக்கவும், அவசரம் கருதி உடனடியாக நிதி ஒதுக்க வேண்டும். இது குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் முதல்வருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, பரமசிவம் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X