புகார் பெட்டி.,.,.

Added : பிப் 11, 2020
Advertisement
 புகார் பெட்டி.,.,.

சுகாதாரம் பாதிப்பு
உடுமலை, ஆசாத் வீதியில் குப்பைக்கழிவுகள் ரோட்டோரத்தில் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.-வி.பாலகுமார்,உடுமலை.
பயணிகள் அவதி
உடுமலை, ஒன்றிய அலுவலக பஸ் ஸ்டாப்பில், நிழற்கூரை இல்லாமல், பயணிகள் காத்திருக்க இடமில்லாமல் அவதிப்படுகின்றனர்.-ஆர்.மாரிமுத்து,உடுமலை.
கொசுத்தொல்லை
உடுமலை, பி.வி.,கோவில் ரோட்டில் சாக்கடை கால்வாய்கள் சுத்தம் செய்யப்படாததால், கழிவுநீர் தேங்கி, கொசுத் தொல்லை அதிகரிக்கிறது.-எஸ்.மாணிக்கம்,உடுமலை.
போக்குவரத்து நெரிசல்
பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகம் அருகே, வாகனங்கள் ரோட்டை ஆக்கிரமித்து நிறுத்தப்படுகிறது. ஆக்கிரமிப்பு கடைகளும் செயல்படுகிறது. இதனால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது.-கே.வரதராஜ்,பொள்ளாச்சி.
கடும் துர்நாற்றம்
பொள்ளாச்சி சந்தைப்பேட்டை பாலம் அருகே, சாக்கடை கால்வாய் அடைத்து நிற்பதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. அதேபோல், ரோட்டில் குப்பைகள் தேங்கி சுகாதாரம் பாதிக்கிறது.-க.கந்தசாமி,பொள்ளாச்சி.
விபத்து அபாயம்
ஆனைமலை - கோட்டூர் ரோட்டோர மரங்களில், கிளைகள் தாழ்வாக தொங்கிக்கொண்டு இருப்பதால், வாகனங்களில் உரசி விபத்து ஏற்படுகிறது. தாழ்வான கிளைகளை வெட்ட வேண்டும்.-மா.கனகவேல்,ஆனைமலை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X