பொது செய்தி

தமிழ்நாடு

தடுப்பணைகளை வனத்துறை பராமரிக்கணும்: வறட்சி துவங்கியுள்ளதால் தேவை நடவடிக்கை

Added : பிப் 11, 2020
Advertisement
 தடுப்பணைகளை வனத்துறை பராமரிக்கணும்: வறட்சி துவங்கியுள்ளதால் தேவை நடவடிக்கை

உடுமலை:வனப்பகுதியில், வறட்சி துவங்கியுள்ள நிலையில், குடிநீருக்காக வனவிலங்குகள் இடம் பெயர்வதை தவிர்க்க, தடுப்பணைகளை பராமரித்து, தண்ணீர் நிரப்ப வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை, அமராவதி வனச்சரகத்தில், 47 ஆயிரம் எக்டர் வனப்பரப்பு உள்ளது. அரிய வகை விலங்குகளின் வாழ்விடமாக உள்ள இந்த வனத்தில், இயற்கையாக உருவாகும் சிற்றாறுகள், மழைக்காலத்தில், வெள்ளம் பாயும் காட்டாறுகள் அதிகம் உள்ளன.கடந்த இரண்டு ஆண்டுகளாக, தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை போதியளவு வனப்பகுதியில் பெய்யவில்லை. ஆண்டில், பெரும்பாலான மாதங்கள் காட்டாறுகள் வறண்டிருந்த நிலையில், முன்னதாகவே துவங்கியுள்ள, கோடை வெயிலால், சிற்றாறுகளிலும் நீர் வரத்து இல்லை.இடம் பெயரும் விலங்குகள்வெயிலின் தாக்கம் அதிகரித்து, ஆறுகள் வறண்டுள்ளதால், தண்ணீர் தேவைக்காக வனவிலங்குகள், வன எல்லையிலுள்ள சமவெளிப்பகுதிக்கு இடம் பெயரத்துவங்கியுள்ளன.இதனால், கடந்த இரு வாரங்களாக, இரண்டு வனச்சரக எல்லையிலுள்ள விளைநிலங்களில், வனவிலங்குகளால் தொடர் சேதம் ஏற்பட்டு வருகிறது; விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். யானைகள், கூட்டம், கூட்டமாக வனஎல்லையில் முகாமிட்டுள்ளன.வனவிலங்குகளின் குடிநீர் தேவைக்காக, காட்டாறுகள், சிற்றுாறுகளின் குறுக்கே, வனப்பகுதியில், 50க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. இதே போல், 40 குடிநீர் தொட்டிகளும் உள்ளன.
இரு வனச்சரகங்களிலும், தலா ஐந்து தொட்டிகளுக்கு, போர்வெல் மற்றும் சோலார் மின் மோட்டார் அமைக்கப்பட்டது. ஆனால், தொடர் பராமரிப்பு இல்லாமல், இந்த கட்டமைப்புகள், முழுத்திறனில் செயல்படுவது இல்லை.தடுப்பணைகளும் பராமரிப்பின்றி, சுவர்கள் இடிந்து பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. கோடை மழை பெய்தாலும், தடுப்பணைகளில், தண்ணீர் தேங்காத அவலம் உள்ளது.
தற்போது வனத்தில் வறட்சி துவங்கியுள்ள நிலையில், வனவிலங்குகள் குடிநீர் தேவைக்காக சிறப்பு ஏற்பாடுகளை செய்வது அவசியமாகும்.அவ்வகையில், தடுப்பணைகளை பராமரித்து, லாரிகளில் தண்ணீர் கொண்டு சென்று நிரப்ப வேண்டும். இதனால், குடிநீரின்றி, தாவர உண்ணிகள் உட்பட அனைத்து வகை விலங்குகளும் சமவெளிப்பகுதிக்கு இடம் பெயர்வது தவிர்க்கப்படும். தன்னார்வலர்கள் உதவியுடன் இப்பணிகளை வனத்துறையினர் உடனடியாக துவக்குவது அவசியமாகும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X