பொது செய்தி

தமிழ்நாடு

தொழில்முனைவோருக்கான பயிற்சி வகுப்பு: இன்றும், நாளையும் நடக்கிறது

Added : பிப் 11, 2020
Advertisement

உடுமலை:உடுமலையில் இன்றும் நாளையும், ஊரக புத்தாக்கத் திட்டத்தில் தொழில் முனைவோருக்கான பயிற்சி வகுப்பு நடக்கிறது.கிராமப்புறங்களில் உள்ள தொழில் முனைவோர்கள், சிறு மற்றும் குறு நிறுவனங்களை உருவாக்குவதற்கான திட்டமாக உள்ளது. கிராமங்களில், வேளாண் சார்ந்த கால்நடை பராமரிப்பு, விவசாயம் மற்றும் பல்வேறு தொழில் முனைவோர்களுக்கு வங்கிக்கடனுதவி வழங்குதல் மற்றும் தொழில் முன்னேற்றம் ஏற்படுத்துவதற்கான ஆலோசனைகள் வழங்குவதற்கான திட்டமாக, ஊரக புத்தாக்கத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.சுயஉதவிக்குழுவினருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்துதல், தொழில் முனைவோர், தங்களின் பொருட்களை சந்தைப்படுத்தும் முறை, விளம்பரம் மற்றும் விவசாயிகள் நேரடியாக காய்களை சந்தைப்படுத்துவதற்கான உதவிகளும் வழங்கப்படுகிறது.ஆதரவற்ற குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான பயிற்சிகளும் வழங்கப்படுகிறது. திட்டத்துக்கான பயனாளிகள் தேர்வு கடந்த மாதம் நடந்தது.முதற்கட்ட பயிற்சி வகுப்பு, இன்றும், நாளையும் நடக்கிறது. ரெட்டிபாளையம், குருவப்பநாயக்கனுார், போடிபட்டி, தீபாலபட்டி, மொடக்குப்பட்டி, பள்ளபாளையம், தும்பலப்பட்டி, ஜல்லிபட்டி, வடபூதிநத்தம், ஆலாம்பாளையம், ஜே.என்.பாளையம் ஊராட்சிகளில், மொத்தமாக, 49 பயனாளிகளுக்கு போடிபட்டி ஊரக வாழ்வாதார இயக்க அலுவலகத்தில் பயிற்சி வகுப்பு நடக்கிறது.பூலாங்கிணர், அந்தியூர், கணபதிபாளையம், ராகல்பாவி, பெரியபாப்பனுாத்து, ஆர்.வேலுார், தின்னப்பட்டி புங்கமுத்துார் ஊராட்சிகளில், தேர்வு செய்யப்பட்ட, 34 பயனாளிகளுக்கு ராகல்பாவி கிராம வறுமை ஒழிப்பு சங்க அலுவலகத்திலும் நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X