பொது செய்தி

தமிழ்நாடு

ஊராட்சிகளில் மீண்டும் பிளாஸ்டிக் பயன்பாடு: கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை அவசியம்

Added : பிப் 11, 2020
Advertisement

உடுமலை:கிராம ஊராட்சிகளில் உள்ளாட்சி பிரதிநிதிகள் மூலம் மீண்டும் பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.தரமில்லாத பிளாஸ்டிக் பயன்படுத்த மாநில அளவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. கிராம ஊராட்சிகளிலும், இந்த தடையை நடைமுறைப்படுத்தவும், பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கவும், ஊரக வளர்ச்சித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டது. உடுமலை, குடிமங்கலம் ஒன்றியங்களில், பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையிலும், எந்த ஆய்வுகளும் நடத்தப்படவில்லை.கடந்தாண்டு, ஊரக வளர்ச்சித்துறை உத்தரவிட்டதால், அதிகாரிகள், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க, ஆய்வுகள் நடத்தியும், பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தும், நடவடிக்கை எடுத்தனர்.ஊராட்சிகளில் சிறப்பு அலுவலர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டதால், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளில் தாமதம் ஏற்பட்டது. தற்போது அனைத்து ஊராட்சிகளிலும் பிரதிநிதிகள் உள்ளனர்.ஊராட்சிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதில் மட்டுமின்றி, மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் செயல்பாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியவர்களாக ஊராட்சி பிரதிநிதிகள் உள்ளனர். உடுமலை மற்றும் குடிமங்கலம் ஒன்றியங்களில், தற்போதும், தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் வணிக கடைகளில், பயன்பாட்டில் உள்ளது.ஊராட்சி பிரதிநிதிகள், கிராமங்களில், தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை நுாறு சதவீதம் குறைப்பதற்கு, நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிகள், ஆய்வுகளை தீவிரப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X