பொது செய்தி

தமிழ்நாடு

நெல் விலை உயரணும்: விவசாயிகள் எதிர்பார்ப்பு

Added : பிப் 11, 2020
Advertisement

மடத்துக்குளம்:மடத்துக்குளம் பகுதியில், நெல் விலை உயர வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.மடத்துக்குளம் ஆயக்கட்டு பகுதியில், 2,500 ஏக்கருக்கும் கூடுதலாக நெல் சாகுபடி நடந்தது. தற்போது அறுவடை தீவிரமடைந்துள்ளது. ஆனால் நெல்லுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.அவர்கள் கூறுகையில், 'சம்பா அறுவடையில், 7,000 டன் அளவில் நெல் சாகுபடி கிடைக்க வாய்ப்பு உள்ளது; 120 கிலோ கொண்ட இரண்டு மூட்டைகளுக்கு, 3,000 ரூபாய் வரை விலை கிடைக்கும் என எதிர்பார்த்தோம். நோய்த்தாக்குதல், மகசூல் குறைவு என பாதிப்பு உள்ளது. இதனால் ஒரு ஏக்கருக்கு, 10 ஆயிரம் ரூபாய் வரை விவசாயிகளுக்கு கூடுதல் செலவாகியுள்ளது. இதற்கு தீர்வாக, நெல் விலை உயர வேண்டும் என எதிர்பார்க்கிேறாம்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X