பொது செய்தி

தமிழ்நாடு

இரண்டு நான்காகுமா?வேளாண் பொறியியல் துறையில் டிராக்டர்கள்...சிறு, குறு விவசாயிகள் பயனடைய கோரிக்கை

Added : பிப் 11, 2020
Advertisement

பொள்ளாச்சி:பொள்ளாச்சி வேளாண் பொறியியல் துறையில், விவசாயிகளுக்கு வாடகைக்கு விடப்படும் டிராக்டர்களின் எண்ணிக்கை, இரண்டில் இருந்து நான்காக அதிகரிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
பொள்ளாச்சி வேளாண் பொறியியல் துறை, பொள்ளாச்சி வடக்கு, தெற்கு, கிணத்துக்கடவு மற்றும் ஆனைமலை ஆகிய நான்கு ஒன்றியங்களுக்கு உட்பட்ட விவசாயிகளுக்கு அரசின் மானிய திட்டங்களை கொண்டு சேர்க்கிறது.விவசாய தளவாடங்கள், கருவிகள், மதிப்புக்கூட்டும் இயந்திரங்கள், சோலார் பம்ப் செட், சோலார் உலர் கலன் உள்ளிட்டவை வாங்கவும், பண்ணை குட்டை உள்ளிட்ட நிலத்தடி நீர் மேம்பாட்டு திட்டங்களை தங்கள் விளை நிலத்தில் அமைக்கவும் மானியம் அளிக்கிறது.அதே போல், நெல் கதிரடிக்கும் இயந்திரம், டிராக்டர், புல் டோசர் உள்ளிட்டவற்றை நியாயமான கட்டணத்தில் வாடகைக்கும் அளிக்கிறது. இதில், நெல் கதிரடிக்கும் இயந்திரம் மூன்று ஆண்டுகளுக்கு முன், டெல்டா மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், இதுவரை பொள்ளாச்சிக்கு திரும்ப வரவேயில்லை.
கடந்தாண்டு வரை, ஒரே ஒரு டிராக்டர் மட்டுமே வாடகைக்கு அளிக்கப்பட்டு வந்தது. அதுவும், பெரும்பாலான நாட்களில் பழுதாகி விட்டது; டிரைவர் இல்லை என ஏதாவது காரணம் கூறப்பட்டு, பெரும்பாலான விவசாயிகள் பயன்படுத்த இயலாத நிலையில் இருந்தது.இதனால், 'ஒரு டிராக்டர் போதாது; கூடுதல் டிராக்டர்கள் வாடகைக்கு விடப்பட வேண்டும்,' என விவசாயிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து, கூடுதலாக ஒரு டிராக்டர் வாங்கப்பட்டு, தற்போது இரண்டு டிராக்டர்கள் வாடகைக்கு அளிக்கப்படுகின்றன.வேளாண் பொறியியல் துறை டிராக்டரில் உழவு செய்ய, ஒரு மணி நேரத்துக்கு, 350 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தனியார் டிராக்டர்கள் இரு மடங்கு கட்டணம் வசூலிக்கின்றனர். அந்த அதிக கட்டணத்தை கொடுக்க இயலாமல், சிறு, குறு விவசாயிகள் சிரமப்படுகின்றனர். துறையின் டிராக்டர் கிடைத்தால், அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.ஆனால், இத்திட்டத்தில் அனைத்து விவசாயிகளும் பயனடைய இயலாத நிலை நிலவுகிறது.விவசாயிகள் கூறுகையில், 'அரசியல் மற்றும் அதிகாரிகள் செல்வாக்குள்ள சில விவசாயிகளுக்கு மட்டுமே துறையின் டிராக்டர்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. மற்றவர்கள் கேட்டால், ஏதாவது காரணம் கூறி அனுப்பாமல் தவிர்த்து விடுகின்றனர்.
பொள்ளாச்சி வேளாண் பொறியியல் துறையின் கட்டுப்பாட்டில் நான்கு ஒன்றியங்கள் வருவதால், ஒன்றியத்துக்கு தலா ஒரு டிராக்டர் என்ற விகிதத்தில், நான்கு டிராக்டர்கள் வாங்கி வாடகைக்கு அளிக்க வேண்டும். சிறு, குழு விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்,' என்றனர்.வெளிப்படை தன்மை தேவை!வேளாண் பொறியியல் துறையில், தற்போது டிராக்டர் வாடகைக்கு அளிக்கும் முறை, வெளிப்படை தன்மையுடன் இல்லை என்பதே பரவலான குற்றச்சாட்டாக உள்ளது.இதை தவிர்க்க, சிறு, குறு விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், முன்பதிவு அடிப்படையில் டிராக்டர்கள் வழங்கும் முறையை கையாள வேண்டும்.முன் பதிவு செய்யும் பதிவேட்டை, வெளிப்படையாக வைக்க வேண்டும். விவசாயிகள் கூட்டங்களில், அந்த பதிவேட்டை விவசாயிகள் பார்வைக்கும் வைக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X