பொது செய்தி

தமிழ்நாடு

கொளுத்தும் கோடை வெயில் தர்பூசணி விற்பனை படுஜோர்

Added : பிப் 11, 2020
Advertisement
 கொளுத்தும் கோடை வெயில் தர்பூசணி விற்பனை படுஜோர்

ஆனைமலை:பொள்ளாச்சி, ஆனைமலை சுற்றுப்பகுதிகளில், வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளதால், தர்பூசணி விற்பனை சூடுபிடித்து உள்ளது.
தமிழகம் முழுவதிலும் பிப்., இறுதி முதல் மே மாதம் வரையிலான கோடை காலத்தில், கடும் வெயில் நிலவுவது வழக்கம். வெயிலின் தாக்கத்தை சமாளிக்க மக்கள், தர்பூசணி, வெள்ளரிக்காய், நுங்கு, இளநீர் உள்ளிட்டவையை அதிகம் உட்கொள்கின்றனர்.இதில், மக்களிடையே தர்பூசணி தனியானதொரு இடத்தைப் பெற்றுள்ளது. இதனால், கோடை காலம் துவங்கியதும் தர்பூசணி விற்பனை துவங்கியுள்ளது.பழக்கடைகளிலும், பொள்ளாச்சி - ஆழியாறு, பொள்ளாச்சி - மீனாட்சிபுரம் ரோடுகளிலும், ரோட்டோர கடைகளில், தர்பூசணி விற்பனை அதிகரித்து வருகிறது.நடப்பாண்டு தர்பூசணி விலை அதிகரித்து உள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
விற்பனையாளர்கள் கூறியதாவது:திண்டிவனம், உடுமலை, அமராவதி, தாராபுரம் பகுதிகளில் இருந்து, தர்பூசணி வரத்து உள்ளது. கடந்தாண்டு ஒரு கிலோ, 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. நடப்பாண்டு ஒரு கிலோ, 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு பிளேட் தர்பூசணி, 20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.கடந்தாண்டை விட இந்தாண்டு கிலோவுக்கு, ஐந்து ரூபாய் அதிகரித்து உள்ளது. மார்ச்., இறுதி முதல் மே வரையில் தர்பூசணி சீசன். அப்போது, வரத்து அதிகரித்து விலை சற்று குறையும்.இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X