பொது செய்தி

தமிழ்நாடு

மையப்பகுதியில் அழகுபடுத்தப்படாத ரவுண்டானா: அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது அவசியம்

Added : பிப் 11, 2020
Advertisement

உடுமலை:உடுமலை பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா, மையப்பகுதி மற்றும் மையத்தடுப்புகளில் செடிகள், புற்கள் வைத்து அழகுபடுத்த, அதிகாரிகள் நட வடிக்கை எடுக்க வேண்டும்.உடுமலை பஸ் ஸ்டாண்ட் அருகே, தேசிய நெடுஞ்சாலையான, பழநி -பொள்ளாச்சி ரோடு, மாநில நெடுஞ்சாலைகளான, ரயில்வே ஸ்டேஷன் ரோடு, பைபாஸ் ரோடு மற்றும் ஐஸ்வர்யா நகர், அனுஷம் ரோடுகள் சந்திக்கின்றன.பஸ் ஸ்டாண்டிற்கு, பஸ்கள் உள்ளே செல்வது, வெளியே வருவது என, போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக இருந்தது. இதற்கு தீர்வு காணும் வகையில், தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில், 1.10 கோடி ரூபாய் செலவில், சிக்னல் இல்லாத ரவுண்டானா அமைக்கப்பட்டது. ஆனால், ரவுண்டானா திட்ட வடிவமைப்பில் ஏற்பட்ட குளறுபடி மற்றும் சிறியதாக உள்ளதால், பழநி மற்றும் ராஜேந்திரா ரோடு, பைபாஸ் ரோட்டிலிருந்து வரும் வாகனங்கள், மெதுவாக வருவதற்கு பதில் வேகமாக வருகின்றன.அதே போல், ரவுண்டானாவின் மையப்பகுதி மற்றும் ரோடுகளின் மையத்தடுப்புகளில், புற்கள், செடிகள் வைத்து அழகு படுத்தப்படாமல் உள்ளன. எனவே, சிக்னல் இல்லாத ரவுண்டானா பணியை முழுமையாக முடிக்கவும், மையப்பகுதி மற்றும் மையத்தடுப்புகளை அழகுபடுத்தவும், போதிய மின் விளக்குகள் அமைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X