கொரோனா வைரஸ் பாதிப்பு கல்லுாரியில் விழிப்புணர்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'கொரோனா' வைரஸ் பாதிப்பு கல்லுாரியில் விழிப்புணர்வு

Added : பிப் 11, 2020
Share
 'கொரோனா' வைரஸ் பாதிப்பு கல்லுாரியில் விழிப்புணர்வு

வால்பாறை:'கொரோனா' வைரஸ் குறித்து கல்லுாரியில் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் 'கொரோனா' வைரஸ் காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமில் கல்லுாரி முதல்வர் முரளிதரன் தலைமை வகித்தார்.நகராட்சி பொறியாளர் சரவணபாபு, மேலாளர் நஞ்சுண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவிபேராசிரியர் மகேஸ் வரவேற்றார்.வால்பாறை அரசு மருத்துவமனை மகப்பேறு மருத்துவர் மகேஸ்ஆனந்தி பேசியதாவது:வனவிலங்குகளால் தான் 'கொரோனா' வைரஸ் நோய் பரவுகிறது. வைரஸ் பரவாமல் தடுக்க, ஒரு நாளைக்கு குறைந்தது, 10 முறையாவது சோப்பு போட்டு கை கழுவ வேண்டும்.மாமிச உணவுகளை நன்கு வேக வைத்து உட்கொள்ள வேண்டும்.
ஒரு நாளைக்கு குறைந்தது, 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க நிலவேம்பு கஷாயம் குடிக்க வேண்டும்.வைரஸ் நோய் அறிகுறி இருந்தால், இருமல், தும்மல், மூச்சுத்திணறல் போன்றவை இருக்கும். இது போன்ற அறிகுறி இருந்தால், அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தார். தமிழ்துறை பேராசிரியர் தமிழ்கனி நன்றி கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X