பொது செய்தி

தமிழ்நாடு

பயன்பாடில்லாமல் வீணாகும் உணவு தானிய கிடங்கு

Added : பிப் 11, 2020
Advertisement

உடுமலை:உடுமலை ஒன்றியம், கண்ணமநாயக்கனுார் ஊராட்சியில், ஊராட்சி வளர்ச்சி துறையின் சார்பில் கட்டப்பட்ட, உணவு தானியக்கிடங்கு, பயன்பாடில்லாமல், பூட்டிக்கிடக்கிறது.உடுமலை ஒன்றியம், ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில், கண்ணமநாயக்கனுார் ஊராட்சியில், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், 2015ம் ஆண்டு, 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், உணவு தானியக்கிடங்கு கட்டப்பட்டது.விவசாயிகள் தானியங்களை, இருப்பு வைத்துக்கொள்வதற்கும், ரேஷனில் வழங்கப்படும் உணவு பொருட்களை, சேகரித்து வைப்பதற்கும், இந்த கட்டடம் பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், கடந்த நான்கு ஆண்டாக பயன்படுத்தாமல், வீணாக உள்ளது. சுற்றுப்பகுதியிலுள்ள விவசாயிகள், மக்காச்சோளம், கொப்பரை உள்ளிட்ட விளை பொருட்களை, பல கி.மீ., துாரம் வாகனங்களில் கொண்டு சென்று இருப்பு வைக்கும் நிலை உள்ளது.எனவே, விளைபொருட்களை இருப்பு வைத்து, விலை வரும் போது விற்கும் வகையில், ஊராட்சி உணவு தானிய கிடங்கை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். வளாகத்தில், வீணாக உள்ள பகுதியில், உலர் களம் அமைத்தால், விளை பொருட்களை காய வைக்கவும் வசதியாக இருக்கும், என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட, உணவு தானியக்கிடங்கு, பயன்படுத்தாமல், புதர் மண்டி காணப்படுகிறது. போதை, கஞ்சா உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் நடக்கும் மையமாக மாறியுள்ளது.உணவு தானியக்கிடங்கை, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X