சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிதிலமடைந்த 'மேன்ேஹால்' விபத்து ஏற்படுத்தும் அபாயம்

Added : பிப் 11, 2020
Advertisement
 சிதிலமடைந்த 'மேன்ேஹால்' விபத்து ஏற்படுத்தும் அபாயம்

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில் பாதாள சாக்கடை திட்ட ஆள் இறங்கும் குழியான 'மேன்ேஹால்' சிதிலமடைந்துள்ளதாலும், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
பொள்ளாச்சி நகரில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நடக்கிறது. இத்திட்டத்தில் கட்டப்பட்ட ஆள் இறங்கும் குழிகள் தற்போதே பல இடங்களில் சிதிலமடைந்து காணப்படுகின்றன.இந்நிலையில், பொள்ளாச்சி டைமண்ட் சிட்டி வழியாக வடுகபாளையம் செல்லும் ரோட்டில் ஆள் இறங்கும் குழி சிதிலமடைந்துள்ளது.ஆள் இறங்கும் குழி சிதிலமடைந்து பெயர்ந்துள்ளதால், விபத்துகள் ஏற்படுவதை தடுக்க பாதாள சாக்கடை திட்டத்துக்கு பயன்படுத்தப்படும் குழாயை நட்டு வைத்துள்ளனர். தற்போது, இந்த தடுப்பும் விபத்து ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.பொதுமக்கள் கூறுகையில், 'பாதாள சாக்கடை திட்டத்தால், தோண்டப்பட்ட ரோடு தற்போது தான் சீரமைக்கப்படுகிறது. ஆனால், குழியை மூட நடவடிக்கை இல்லாததால், சிரமத்துக்குள்ளாகிறோம். இரவில் அவ்வழியாக வரும் வாகன ஓட்டுனர்கள் கவனமின்றி விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. எனவே, ஆள் இறங்கும் குழியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X