சம்பவம் செய்தி

தமிழ்நாடு

செல்வாக்கு இருந்தா மானியம்சாதாரண விவசாயிக ஆதங்கம்

Added : பிப் 11, 2020
Advertisement

பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்ல இளம் விவசாயி ஒருத்தரை சந்திச்ச போது, வேளாண் துறைல நடக்கற பல பிரச்னைகளை சொல்லி ஆதங்கப்பட்டாரு.பொள்ளாச்சி வேளாண் துறை, வேளாண் பொறியியல் துறையில செயல்படுத்தற மானிய திட்டங்கள்ல, சாதாரண விவசாயிகள் எத்தனை பேரு பலனடைஞ்சிருக்காங்கன்னு கணக்கெடுத்தா, பெரிய அதிர்ச்சி காத்திருக்கும்.ஏன்னா, பெரும்பாலான திட்டங்கள்ல, குறிப்பிட்ட சில விவசாயிங்க தான் திரும்ப திரும்ப பயனடைஞ்சிருக்காங்க. அரசியல் பின்புலம், அதிகாரிங்க செல்வாக்கு உள்ள அந்த விவசாயிக, தங்களுக்கு கிடைச்சது போக, மிச்சமிருக்கறது தான், மத்தவங்களுக்கு போய் சேரணும் துறை அலுவலர்கள மிரட்டி வச்சிருக்காங்க.ஏதாவது நல்ல திட்டம் வந்தா, அதை சாதாரண விவசாயிங்களுக்கு கள அலுவலர்க தெரிவிக்கிறது கூட இல்லை.திட்டத்த பத்தி தெரிஞ்சுக்கிட்டு, வேளாண் துறையில யாராவது கேட்டா, 'நீங்க லேட்... அதெல்லாம் கொடுத்து முடிச்சாச்சுனு,' சொல்லி திருப்பி அனுப்பிடுறாங்க. இதுக்கெல்லாம், முற்றுப்புள்ளி வைக்கணும்னு ஆதங்கத்தை கொட்டினார்.பட்டாவுக்கு மல்லுக்கட்டுபழங்குடியினர் போராட்டம்வால்பாறை தாலுகா அலுவலகம் அருகில், பழங்குடியினர் இருவர் பேசிக்கொண்டிருந்தனர். அவர்களின் பேச்சை கவனித்தேன்.நாம யாரு சொத்துக்கும், ஆசைப்படல. யாரு கிட்டேயும் வம்பு, தும்புக்கு போறதில்ல. காலாகாலமா காட்டுக்குள்ளே குடிசை வீடு கட்டி வாழறோம்.வனஉயிரினங்களையும், வனத்தையும் நாம தான் ராப்பகலா பாதுகாக்கிறோம். ஆனா, நம்ம குறைய கேட்க யாருமில்ல. காட்ட விட்டு துரத்தரதிலேயே வனத்துறைக்காரங்க குறியா இருக்காங்க.மத்திய அரசு பட்டா கொடுக்க சென்னாலும், இவங்க ஏதாவது காரணம் சொல்லி இழுத்தடிக்கறாங்க. இதுக்கெல்லாம் ஒரு முடிவு கட்டணும், வால்பாறையிலிருந்து கோவைக்கு நடைபயணமா போயி குறைகளையெல்லாம் கலெக்டரு கிட்ட சொல்லணும் நம்மாளுக முடிவு பண்ணியிருக்காங்க.ஆனா, போராட்டத்தை தடுக்க அதிகாரிகளும், ஆளுங்கட்சிக்காரங்களும் கங்கணம் கட்டிட்டு சுத்தறாங்க. நம்ம பிரச்னைய ஒண்ணும் நடக்கலை. நடைபயணமா போயி, கலெக்டரு கிட்ட நம்ம பிரச்னைய சொல்லி தீர்வு காணாம ஓயக்கூடாதுனு, பேசிக்கிட்டாங்க.வருவாய் துறைல 'டிரான்ஸ்பர்'மறைந்திருக்கும் மர்மமென்ன?பொள்ளாச்சியில் ஓய்வு பெற்ற வருவாய்துறை அதிகாரி ஒருவரை சந்தித்தேன். அவருடன் பேசியதில் இருந்து...வருவாய்துறையில நடக்கறது எல்லாமே மர்மமா இருக்குதுங்க. நல்லா வேல செஞ்சிட்டு இருக்கறவங்ள திடீர்னு 'டிரான்ஸ்பர்' பண்ணுறாங்க. எதுக்காக மாத்தினாங்கனு காரணமும் சொல்ல மாட்டீங்கறாங்க.டவுனுக்கு புதுசாக ஒரு வி.ஏ.ஓ., நியமிச்சாங்க. அவரு வந்து ஆறு மாசம் ஆகறதுக்குள்ள திடீர்னு மாத்திட்டங்க. எதுக்காக இப்படியெல்லாம் திடீர்னு மாத்தறாங்கனு புரியல. எல்லாமே புரியாத புதிரா இருக்கு.அதிகாரிக கிட்ட கேட்டா, இதெல்லாம் மேலிடத்து ரகசியம்னு, சரியா பதில் சொல்ல மாட்டீங்கறாங்க.டவுன் வி.ஏ.ஓ.,க்கு நிறைய பொறுப்பு இருக்கு. சப் - கலெக்டர் ஆபீஸ், தாசில்தார் ஆபீஸ்ல எப்ப மீட்டிங் நடந்தாலும் டீ, காபி, ஸ்நாக்ஸ் செலவு பண்ணணும். முக்கிய அதிகாரிக வீட்டுக்கு தேவையானத வாங்கறதுக்கு செலவு பண்ணணும்.இதையெல்லாம் செய்யலைனா, துாக்கியடிச்சிடுவாங்கனு, அதிகாரிக மட்டத்துல விஷயம் 'லீக்' ஆச்சு. நேர்மையா இருந்தா வருவாய் துறைல நிம்மதியா வேலை செய்ய முடியாது. அதுக்கு, டவுன் வி.ஏ.ஓ., 'டிரான்ஸ்பர்' மேட்டர் முன்னுதாரணம்னு, ஆதங்கப்பட்டார்.இப்பவே அலப்பறை தாங்கலஆட்சிக்கு வந்தா அவ்ளோதான்உடுமலை பஸ் ஸ்டாண்டுல, தி.மு.க., நிர்வாகி ஒருத்தர சந்திச்சேன். கட்சி நிர்வாகியின் பிறந்தநாள் விழா பத்தி சொன்னாரு.உடுமலை நகர தி.மு.க., முக்கிய புள்ளி ஒருத்தரோட பிறந்த நாள் விழா, இரவு நேரத்துல நடந்துச்சு. 'கேக்' வெட்டியும், பட்டாசு வெடித்தும், ஆதரவாளர்க கொண்டாடினாங்க.மக்கள் நெரிசலா இருந்த நேரத்துல, வணிக வளாக பகுதியில, திடீரென பட்டாசு வெடிச்சாங்க. பட்டாசு குடோன் ஏதாவது தீப்பிடிச்சிடுச்சானு, மக்கள் அதிர்ந்து போயிட்டாங்க.கட்சித் தலைவர் பிறந்தநாளுக்கு கூட இவ்வளவு பட்டாசு வெடிக்கவில்லையே, என, உடன் பிறப்புகள் புலம்பினர். ஆட்சிக்கு வர்றதுக்கு முன்னாடியே, இப்படி அலப்பறை பண்ணுறாங்க. ஆட்சிக்கு வந்துட்டாங்கனா இன்னும் என்னென்ன பண்ணுவாங்களோ. இவங்க மாதிரி ஆளுகளால கட்சிக்கு தான் கெட்ட பேரு வருதுனு, ஆதங்கப்பட்டாரு.'செக்ஸ்போட்'ல மாற்றமிருக்குஒரு ஆளு இன்னும் மாறலையேஉடுமலை வனத்துறை ஆபீஸ்ல நேர்மையான அதிகாரி ஒருத்தரை சந்தித்தேன். அவர், 'செக்போஸ்ட்' பத்தின விஷயத்த சொன்னார்.உடுமலை - மூணாறு ரோட்டுல, மாநில எல்லையில இருக்கற சின்னாறு, மற்றும் அமராவதி வனச்சரக வனத்துறை 'செக்போஸ்ட்' இருக்கு.செக்போஸ்ட்கள கடக்கும் வாகனங்களுக்கு 'இல்லீகலா' பணம் வசூல் பண்ணுறத தடுக்க, 'சிசிடிவி' கேமரா பொருத்தினாங்க. புதுசா தேர்வு பண்ணின ஆட்கள அங்கு நியமிச்சு, வனத்துறை அதிகாரிக பல்வேறு நடவடிக்கை எடுத்தாங்க.இப்ப, சுழற்சி முறையில மாவட்டம் முழுவதும் இருந்து, வனத்துறையினரை 'செக்போஸ்ட் டியூட்டி' போடுறாங்க. இதனால, 'இல்லீகலா' பணம் வசூல் பண்ணுறது குறைந்திருக்கு.இந்த நேரத்துல, சின்னாறு செக்போஸ்ட்ல பழைய ஆள் ஒருவர் இருக்காரு. அவரு, ரெண்டு செக்போஸ்ட்க்கும் போய், வசூல் பண்ணுராரு. அவரையும் களை எடுத்தா, 'செக்போஸ்ட்' சுத்தமாகும். வாகன ஓட்டுனர்களும் நிம்மதியாக, வனத்துறைக்கு சாபம் விடாம போவாங்க.நகரத்துக்குள் நரக வேதனைஎல்லையில வசூல் வேட்டைஉடுமலை சந்தை ரோடு சந்திப்புல, நண்பரை சந்தித்தேன். நகரத்துல நகர முடியாத அளவுக்க இருக்கற நெரிசல் பற்றி ஆதங்கப்பட்டு கூறியதில் இருந்து...உடுமலை தளி ரோடு, பழநி ரோடு, பைபாஸ் ரோடு, தாராபுரம் ரோடு, திருப்பூர் ரோடு, சந்தை ரோடுனு, பிரதான ரோடுகள்ல ஆக்கிரமிப்பு கடைக ஏராளமா இருக்கு.வாகனங்கள நடு ரோட்டிலையே நிறுத்தி பொருள், ஏற்றி இறக்கறாங்க. ரோட்டோரத்தையும் வாகனத்த நிறுத்தி ஆக்கிரமிப்பு செய்யறாங்க. அதனால, போக்குவரத்து நெரிசலும், விபத்தும் அடிக்கடி நடக்குது. காலை, மாலை பள்ளி நேரத்துல கடுமையா பாதிப்பு இருக்கு.போக்குவரத்து போலீஸ்காரங்க, இதையெல்லாம் ஒழுங்கு படுத்தும் பணியிலோ, விதி மீறி நிறுத்தப்படும் வாகனங்களையோ கண்டுக்கறதில்ல.பஸ் ஸ்டாண்ட், பழைய பஸ் ஸ்டாண்டுல ரெண்டு சிக்னல் இருந்தது. இப்போ, பஸ் ஸ்டாண்டுல ரவுண்டானா கட்டினதால சிக்னல அகற்றிட்டாங்க. ஒரு சிக்னல் மட்டுமே இருக்கும் நிலையில, போக்குவரத்து போலீசார் என்ன பண்ணுறாங்கனே தெரியல.நகர எல்லைகளில் அவ்வப்போது நின்று, பாக்கெட் நிரம்பும் வரைக்கும் 'அபராதம்' வசூல் பண்ணுறதுல மட்டும் குறியா இருக்காங்க.கடைத்தேங்காயை எடுத்துஉடைக்கற கதையா இருக்கு'கடைத்தேங்காய் எடுத்து, வழிப்பிள்ளையாருக்கு உடைக்கிறதுன்னு சொல்லுவாங்க. அது, இந்து அறநிலையத்துறைக்கு பொருத்தமாக இருக்கும்னு,' சோமவாரப்பட்டியில் இரு பக்தர்கள் மும்முரமாக பேசிக்கொண்டிருந்தனர். அவங்க, உரையாடலை காதுகொடுத்து கேட்டேன்.பொங்கல் பண்டிகை அன்னைக்கு, மாடு ஈன்ற கன்னுக்குட்டியை, மாலகோவிலுக்கு தானமாக கொடுக்கிறோம். அதுக்கு பராமரிப்பு கட்டணம், ஆயிரம் ரூபாய் வசூலிக்கிறாங்க. ஆனா, எந்த பராமரிப்பும், செய்யறது இல்லை.கொஞ்ச நாள் கழிச்சு, ஏதாவது திட்ட பயனாளிகளுக்கு, காணிக்கை மாடுகளை, ஆளுங்கட்சிக்காரங்க தேர்வு செய்யற பயனாளிக்கு இலவசமாக கொடுக்கறாங்க.ஆனா, பராமரிப்பு கட்டணத்தை வசூலிச்சுட்டு, வருஷா வருஷம் ஏலம் விட்டு, எந்த அடிப்படை வசதியும் செய்யறது இல்ல. ஏலம் எடுக்கறவங்க, தாறுமாறா, மக்கள் கிட்ட வசூல் பண்ணுறாங்க.எது நடந்தாலும், கண்டுக்காம, விழாவை சிறப்பா நடத்துறோம்னு அதிகாரிங்க பில்டப் மட்டும் கொடுக்கறாங்கனு பேசிக்கிட்டாங்க.புஸ்வானமாக போனதுஒன்றிய கவுன்சில் கூட்டம்'என்னப்பா இது, சரவெடி வெடிக்கும்னு பார்த்தா, இப்படி புஸ்வானமா போயிருச்சுனு... உடுமலை ஒன்றிய அலுவலகத்தின் வெளியே, இருவர் பேசிக்கொண்டிருந்தனர். அவர்களின் உரையாடல் பக்கமா கவனத்தை திருப்பினேன்.'நானும் பார்த்தேன், 26 பேரு இருக்காங்க. ஆனா, பேசுனது என்னம்மோ பத்துக்கும் குறைவுதான்.ஒன்றியக்குழு தலைவரு, 'அவங்க கட்சித்தலைவருல துவங்கி, எல்லோர் புகழ்பாடினாங்க. இதுல என்ன விசேஷம்னா, அவங்க தலைவரு மாதிரியே துண்டு சீட்டுல யாரோ எழுதி கொடுத்தத வாசித்தாரு.சில பெண் கவுன்சிலர்க, வீட்டுல இருந்து எழுதி கொண்டு வந்தத படிச்சு முடிச்சுட்டு, அப்பாடானு உக்காந்துட்டாங்க. சிலர், விருந்தாளிக மாதிரி, விருந்தோம்பல மட்டும் ஏத்துகிட்டு, கூட்டத்த முடிச்சுட்டாங்க.அலுவலகத்தோட வரவு செலவு கணக்கு கேக்கறதுல இருக்கிற ஆர்வம், மக்களோட பிரச்னைகளை முன்வைக்கிற இல்லையேனு, ஒருத்தரு சொல்லி முடிச்சாரு.அதுக்கு இன்னொருத்தரு, எல்லாருமே புதுசுதானே, அடுத்த கூட்டத்துல பாருங்க, பேச்சு 'அனல்' பறக்கும்னு, வாழைப்பழத்துல ஊசி குத்தற மாதிரி நக்கலடிச்சாரு.வனத்துறையில பொய் கணக்கு எழுத நிதியிருக்கு!பொள்ளாச்சி டாப்சிலிப் கோழிகமுத்தியில், யானைகள் புத்துணர்வு முகாம் நடந்தது. அங்கிருந்த பழங்குடியினர் சிலர் பேசிக்கொண்டிக்கொண்டிருந்தனர். அவர்களது உரையாடலில் இருந்து...நம்ம தொகுதி எம்.எல்.ஏ., கஸ்துாரி, ஆனைமலை புலிகள் காப்பகத்தோட துணை இயக்குனர் மாரிமுத்து எல்லாரும் முகாமுக்கு வந்திருக்காங்க.அவங்க கிட்ட, செட்டில்மென்ட் பகுதியில, பழங்குடியினருக்கு புதிய வீடு கட்டணும்; குடிநீர், கழிப்பிட வசதி ஏற்படுத்தணும்னு கோரிக்கை வச்சோம். குடிநீர் வசதிக்கு ஏற்பாடு செய்யறதா எம்.எல்.ஏ., சொன்னாங்க.துணை இயக்குனர் ஐயா, 'மேடம் தமிழ்நாட்டுலேயே நிதி இல்லாத துறை வனத்துறை தான். போதிய அளவுல நிதி கிடைச்சா, பழங்குடி மக்களுக்கு அடிப்படை வசதி ஏற்படுத்தலாம். நிதி வாங்கித்தர உதவி செய்யுங்கனு,' எம்.எல்.ஏ., கிட்ட அவரு சொன்னாரு.வனத்துறைக்கு நிதி இல்லைனு துணை இயக்கனரு சொன்னாரு. ஆனா, 'யார் யாரையோ, வேட்டைத்தடுப்பு காவலர்னு சொல்லி, பொய் கணக்கு எழுதி பணத்தை சுருட்ட மட்டும், வனத்துறையில நிதியிருக்கானு தெரியல. இருபது வருஷமா நாமளும் கேட்டுக்கிட்டே இருக்கோம், அவங்களும் இப்படித்தான் சொல்லிட்டே இருக்காங்கனு, பேசிக்கிட்டாங்க.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X