பொது செய்தி

தமிழ்நாடு

'ஆமை' வேகத்தில் எமரால்டு குடிநீர் திட்ட பணி: ஜெ., அறிவித்த திட்டத்தின் பரிதாப நிலை

Added : பிப் 11, 2020
Share
Advertisement
 'ஆமை' வேகத்தில் எமரால்டு குடிநீர் திட்ட பணி: ஜெ., அறிவித்த திட்டத்தின் பரிதாப நிலை

ஊட்டி:'எமரால்டு கூட்டு குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்,' என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.ஊட்டி அருகே, எமரால்டு நீர் தேக்கத்திலிருந்து, முள்ளிகூர், இத்தலார், நஞ்சநாடு உள்ளிட்ட மூன்று ஊராட்சிகள் மற்றும் குன்னூர் நகராட்சி, அருவங்காடு, பாஸ்டியர் நிறுவனங்களும் பயன்பெறும் வகையில் எமரால்டு கூட்டு குடிநீர் திட்டம் அறிவிக்கப்பட்டது.
ஊராட்சிக்கு ,25 கோடி ரூபாய்; குன்னூர் பகுதிகளுக்கு, 100 கோடி ரூபாய் மதிப்பில் நிதி ஒதுக்கப்பட்டது. கடந்த, 2013ம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட இந்த திட்டமானது, கடந்த, 2016ம் ஆண்டில் துவக்கப்பட்டது.முதற்கட்டமாக குழாய் அமைக்கும் பணி; தொட்டி அமைக்கும் பணி கடந்த நான்கு ஆண்டுகளாக நடந்து வருகிறது. பிரதான தொட்டி எமரால்டு அணையை ஒட்டி கட்டப்பட்டு வருகிறது. இப்பணி, இன்னும் முழுமை பெறவில்லை. 'இப்பணியை விரைந்து முடித்து தடையின்றி தண்ணீர் வினியோகிக்க வேண்டும்,' என, மக்கள் சம்பந்தப்பட்ட துறைக்கு பலமுறை கோரிக்கை விடுத்து வருகின்றனர்.ஆனால், அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், இப்பணி இன்னும் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.
'மறைந்த முதல்வர் ஜெ., அறிவித்த திட்டத்தின் அவல நிலைக்கு அதிகாரிகள் தான் காரணம்,' என,கூறப்படுகிறது. மாவட்ட கலெக்டர் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டும் கூட இப்பணி கடந்த, 4 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு வருவது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.அதிகாரிகள் கூறுகையில்,'இத்திட்டத்துக்கான பணிகள், 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது. தொட்டி அமைக்கும் பணிகள் விரைவாக நடந்து வருகின்றன. இப்பணிகள் முடிந்தால் விரைவில் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X