கோடமலை கிராமத்தில் என்.எஸ்.எஸ்., முகாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கோடமலை கிராமத்தில் என்.எஸ்.எஸ்., முகாம்

Added : பிப் 11, 2020
Share

குன்னுார்:பர்லியார் ஊராட்சி கோடமலை கிராமத்தில், பிராவிடன்ஸ் மகளிர் கல்லுாரி நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் நடந்தது.முகாமை, கல்லுாரி செயலர் அசும்தா துவக்கி வைத்தார்.அதில், 'தினமும் தியானம், உடற்பயிற்சி, யோகா பயிற்சி, திறன் மேம்பாட்டு பயிற்சி, மகளிர் மேம்பாடு, மனநல பயிற்சி, தனிமனித சுகாதாரம், புற்றுநோய் விழிப்புணர்வு, உடல்நலம், உணவே மருந்து, இயற்கை மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் கருத்துரைகள், நிகழ்ச்சிகள் நடந்தன.
கோத்தகிரி 'கீஸ்டோன்' சார்பில் சதுப்பு நில மேம்பாடு விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.மாணவியர் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர். பள்ளிகளில் தூய்மை, கோவில் திருப்பணி, சாலை மற்றும் நடைபாதை தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. முகாமின் சிறப்பம்சமாக இலவச மருத்துவ முகாம் நடந்தது.தொடர்ந்து ஊர் மக்கள், மாணவியரின் கலை நிகழ்ச்சி நடந்தது. நிறைவு விழாவிற்கு, கல்லுாரி முதல்வர் டாக்டர் ஷீலா தலைமை வகித்தார். ஊர் தலைவர் ராஜு முன்னிலை வகித்தார். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் அனிதா வரவேற்றார். முகாம் அறிக்கையை பேராசிரியை குணசீலி வாசித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X