கூடலுார்:கூடலுார் அரசு கல்லுாரியில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் சார்பில், தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நேற்று முன்தினம் நடந்தது.உதவி பேராசிரியர் மகேஸ்வரன் வரவேற்றார்.நிகழ்ச்சிக்கு, கல்லுாரி முதல்வர் நெடுஞ்செழியன் தலைமை வகித்தார். கருத்தரங்கு மற்றும் கண்காட்சி ஊரக மற்றும் நகர்ப்புற சுகாதார இயக்கம் இயக்குனர் பாபு துவக்கி வைத்து, 'அரசு வேலைவாய்ப்புகள், போட்டித் தேர்வுகள்' குறித்து விளக்கினார்.மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சுந்தரவதனம், தொழில்நெறி வழிகாட்டி அலுவலர் கஸ்துாரி பங்கேற்று தொழில் நெறி குறித்து விளக்கினார். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் வடிவேல் நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE