பிரதம மந்திரி கிசான் சம்மான் திட்டம்: விவசாயிகளுக்கு உதவி தொகை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பிரதம மந்திரி 'கிசான் சம்மான்' திட்டம்: விவசாயிகளுக்கு உதவி தொகை

Added : பிப் 11, 2020
Share

ஊட்டி:நீலகிரியில், 'பிரதமமந்திரி கிசான் சம்மான் திட்டத்தில்' 2,400 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது.நீலகிரியில், 'பிரதம மந்திரி கிசான் சம்மான் திட்டம்' அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது.பயிர் சாகுபடிக்கு தேவையான இடு பொருட்களை கொள்முதல் செய்வதற்கான உதவித்தொகை, விவசாய குடும்பங்களுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை, 2,000 ரூபாய் வீதம் ஒரு ஆண்டுக்கு மூன்று தவணைகளில், 6,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, கடந்தாண்டில் நீலகிரியில், 34 லட்சம் விவசாயிகளுக்கு மூன்று தவணைகளாக, 2, 431 கோடி ரூபாய் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது.நடப்பாண்டில், 'நான்காம் தவணை பெற, ஆதார் அட்டையில் உள்ளவாறு மத்திய அரசு இணையதளத்தில் பெயர் இருக்க வேண்டும்,' என, மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, இதுவரை மூன்று தவணைகள் பெற்று நான்காம் தவணை பெறாத விவசாயிகள், உடனடியாக தங்கள் அருகில் உள்ள பொது சேவை மையத்தை அணுகி, ஆதார் அட்டையில் உள்ளவாறு பெயரை மாற்றம் செய்து பயனடைய வேண்டும்.கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில், ''பிரதம மந்திரி கிசான் சம்மான் திட்டம்' மூலம் பயிர் சாகுபடிக்கு தேவையான இடு பொருட்களை கொள்முதல் செய்ய விவசாயிகளுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.நான்காவது தவணை பெற பொது சேவை மையத்தை அணுகி விவரங்களை தெரிவித்து பயனடைய வேண்டும்,''என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X