சம்பவம் செய்தி

தமிழ்நாடு

யானையிடம் தப்பி ஓடி கீழே விழுந்தவர் காயம்

Added : பிப் 11, 2020
Advertisement

கூடலுார்:கூடலுார் பாண்டியன் குடோன் அருகே உள்ள, முண்டகுன்னு பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணி, 64. இவர் ஊட்டி தேசிய நெடுஞ்சாலை, கூடலூர் நகராட்சி திடக்கழிவு மேலாண்மை மையம் அருகே, உள்ள தனியார் எஸ்டேட் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார்.இவர், காலை தேயிலை தோட்டத்தில் பணியாற்றி கொண்டிருந்தபோது, அங்கு வந்த காட்டுயானையை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதனிடமிருந்து, தப்ப வேண்டி, ஓடியபோது, கீழே விழுந்தார். பணியில் இருந்த தொழிலாளர்கள் சப்தமிட்டு யானை விரட்டி அவரை காப்பாற்றினர்.யானை துரத்தி கீழே விழுந்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக, கூடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.நடுவட்டம் வனச்சரகர் ராமலிங்கம் மற்றும் வன ஊழியர்கள் அப்பகுதியில் ஆய்வு செய்து யானையை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர். இச்சம்பவம், தொழிலாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X