பொது செய்தி

தமிழ்நாடு

'நெகமம் தென்னை உற்பத்தியாளர் நிறுவனம்': விவசாயிகள் ஒருங்கிணைப்பில் துவங்கியாச்சு!

Added : பிப் 11, 2020
Share
Advertisement

பொள்ளாச்சி:நெகமத்தில், வேளாண் விளை பொருள்களை நேரடியாக கொள்முதல் செய்து, அவற்றை மதிப்பு கூட்டு பொருள்களாக மாற்றி, விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம் படுத்த, நெகமம் தென்னை உற்பத்தியாளர் நிறுவனம் துவங்கப்பட்டது.
நெகமம் சுற்றுப்பகுதி விவசாயிகளை ஒருங்கிணைத்து, பொருளாதாரம் மேம்பட, வாழ்வாதாரத்தை பாதுகாத்திட நபார்டு வங்கி உதவி யுடன், சின்னநெகமத்தில் 'நெகமம் தென்னை உற்பத்தியாளர் நிறுவனம்' துவக்கப்பட்டுள்ளது.இந்நிறுவனம், செயல்பட நபார்டு வங்கி உதவியோடு, வாணவராயர் வேளாண் கல்லுாரியின் வழிகாட்டுதல் படியும் துவங்கப்பட்டுள்ளது.தென்னை வளர்ச்சி வாரியத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள இந்நிறுவனத்தில், சுற்றுப் பகுதி விவசாயிகள் பங்குதாரர்களாக சேர்க்கப்பட, கிராமந்தோறும் தீவிர பிரசாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தவிர, இந்நிறுவனத்தின் மூலம் விவசாய உற்பத்தி பொருள்கள் நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு, விவசாயிகளின் பொருளாதாரம் மேம்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.நெகமம் தென்னை உற்பத்தியாளர் நிறுவனம், விவசாயிகள் ஒத்துழைப்புடன், உரம் மற்றும் மருந்துக்கடை, எண்ணெய் மற்றும் தானிய அரவைக்கூடம், வேளாண் இயந்திர வாடகைக்கூடம், விவசாய விளை பொருள்களை கொள்முதல் செய்து, நேரடி வர்த்தகம் பணிகளில் ஈடுபட உள்ளது.இது தவிர, விவசாயிகள் வேண்டுகோள்படி, பயிர் காப்பீடு செய்தல், அரசு மானியம் மற்றும் திட்டத்தகவல்களை பங்குதாரர்களாகிய விவசாயிகளுக்கு பரிமாறுதல், சந்தை விலை நிலவரத்தை உடனுக்குடன் விவசாயிகளுக்கு தெரிவித்தல் பணிகளை மேற்கொள்ள உள்ளது.
நிறுவனத்தில் பங்குதாரர்களாக சேர ஆர்வமுள்ள விவசாயிகள் ஆதார் அட்டை, பாஸ்போர்ட் புகைப்படம், பான்கார்டு, வங்கிக்கணக்கு, வாரிசுதாரர் விபரம், வாரிசுதாரர் காப்பாளர் விபரம், சொந்த நிலத்தின் சிட்டா, அடங்கல், உரிசைச்சான்று, பராமரிப்பு சான்று ஆகியவற்றுடன், நெகமம் தென்னை உற்பத்தியாளர் நிறுவனத்தை அணுகலம் என, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X