பொது செய்தி

தமிழ்நாடு

மின்தடையால் முடங்கியது எஸ்.பி.ஐ., வங்கி சேவை

Added : பிப் 11, 2020 | கருத்துகள் (2)
Advertisement
 மின்தடையால் முடங்கியது எஸ்.பி.ஐ., வங்கி சேவை

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில் மின்தடையின் போது, ஜெனரேட்டரும் பழுதடைந்ததால், எஸ்.பி.ஐ., வங்கி சேவை முடங்கியது.
பொள்ளாச்சியில் அதிக வாடிக்கையாளர்களை கொண்ட பாரத ஸ்டேட் வங்கியின் கிளை, காந்திசிலை அருகே செயல்படுகிறது.பொள்ளாச்சியில் நேற்று மின்தடை என்பதால், வங்கியில் காலை முதல் ஜெனரேட்டர் இயங்கியது. மதியம், 2:45 மணிக்கு, ஜெனரேட்டர் பழுதாகி நின்றதால், மின் வினியோகம் துண்டிக்கப்பட்டது. இதனால், வங்கியின் கணினிகள், ஏ.டி.எம்., இயந்திரங்கள் செயல்படவில்லை. வங்கி சேவை முற்றிலும் முடங்கியது. நேற்று திங்கட்கிழமை என்பதால், வங்கியில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது.இந்நிலையில், வங்கி சேவை முடங்கியதால், வாடிக்கையாளர்கள் கடும் அவதிக்குள்ளாயினர். வங்கி அதிகாரிகளுடன், வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எஸ்.பி.ஐ., துணை கிளை மேலாளர் அஞ்சலிதேவி கூறுகையில், ''மின்தடையால் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது; உடனடியாக பிரச்னை சரி செய்யப்பட்டது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
11-பிப்-202018:23:47 IST Report Abuse
Ram Pollachi நேற்று அரை நாள் அறிவிக்கப்பட்ட மின் தடை பலருக்கு தெரியாது. இங்கே பணம் கட்ட 1No. கவுன்டரில் மட்டும் செலுத்த முடியும் . டாஸ்மாக், சுய உதவிக்குழு, பெட்ரோல் பங்க், அஞ்சல் ஊழியர்கள் வந்தால் பின்னால் நிற்பவர்கள் நிலை பரிதாபம். தினமும் யாராவது ஏழரைய ஆட்டம் ஆடுவது வாடிக்கை.
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
11-பிப்-202008:30:29 IST Report Abuse
Natarajan Ramanathan மின்தடை என்றால் மக்கள் மின்வாரிய அதிகாரிகளுடன் அல்லவா வாக்குவாதம் செய்ய வேண்டும்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X