டாஸ்மாக் மதுக்கடையை அகற்றணும்! சப் - கலெக்டரிடம் முறையீடு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'டாஸ்மாக்' மதுக்கடையை அகற்றணும்! சப் - கலெக்டரிடம் முறையீடு

Added : பிப் 11, 2020 | கருத்துகள் (1)
Share

பொள்ளாச்சி:'டாஸ்மாக் மது கடையை அகற்ற வேண்டுமென,' மக்கள், சப் - கலெக்டரிடம் மனு கொடுத்து வலியுறுத்தினர்.பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில், குறைதீர் நாள் கூட்டம் நேற்று நடந்தது.
சப் - கலெக்டர் வைத்திநாதன் தலைமை வகித்தார்.கோட்டூர் மலையாண்டிபட்டணம் முத்து நகர் மற்றும் ரெயின்போ காலனி பொதுமக்கள் கொடுத்த மனு:கோட்டூர் மலையாண்டிபட்டணம் முத்து நகர் மற்றும் ரெயின்போ காலனி பகுதியில், 180க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், விவசாய கூலி வேலை செய்து அன்றாட வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர்.கடந்த ஒரு வார காலமாக குடியிருப்பு பகுதியில், டாஸ்மாக் கடை துவங்குவதற்கான முயற்சிகள் நடக்கின்றன. இப் பகுதி அருகே அங்கன்வாடி, பெண்கள் மேல்நிலைப்பள்ளியும் உள்ளன.பெண்களும் தங்களது விவசாய கூலி வேலைக்காக டாஸ்மாக் கடை அமைய உள்ள பகுதி வழியாகத்தான் சென்று வருகின்றனர். டாஸ்மாக் கடை வந்தால் பல்வேறு இடையூறுகள் ஏற்படும். எனவே, கடை அமையாமல் இருக்க அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.செம்பா கவுண்டர் காலனி குடியிருப்போர் நலச்சங்கம் கொடுத்த மனு:சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சியில், செம்பாகவுண்டர் காலனி, விநாயகர் கோவில் வீதி ரோடுகள் மற்றும் சாக்கடை கால்வாய்கள், கடந்த, 20 ஆண்டுகளுக்கு மேலாக எவ்வித பராமரிப்பும் இன்றி மோசமான நிலையில் உள்ளது.தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், பேரூராட்சி பகுதியில் அதிகளவு விற்பனை செய்யப்படுகிறது. அடிப்படை வசதிகள் மேம்படுத்தவும்; பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யவும் நட வடிக்கை எடுக்க வேண்டும்.ஜமீன்ஊத்துக்குளி சரவண கவுண்டர் வீதி, ராமகிருஷ்ண நகர், மீன்கரை ரோடு மற்றும் காளிங்கராயர் நகர் பொதுமக்கள் கொடுத்த மனு:ஜமீன்ஊத்துக்குளி குஞ்சிபாளையம் பிரிவு பகுதியில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், மெயின் ரோட்டில் இருந்து மதுக்கடை இடமாற்றம் செய்யப்பட்டது. தற்போது, அந்த கடை சிங்காநல்லுார் ரோட்டில், ரயில்வே கேட், குடியிருப்பு பகுதி அருகில் அமைக்கப்பட்டுள்ளது.இதனால், மக்கள் பாதிப்பிற்குள்ளாகின்றனர். எனவே, இந்த மது கடையை மூட நட வடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X