பொது செய்தி

இந்தியா

இந்திய அணி மூன்றாவது தோல்வி: தொடரை முழுமையாக இழந்தது

Updated : பிப் 11, 2020 | Added : பிப் 11, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
கிரிக்கெட், இந்தியா, பேட்டிங்,

இந்த செய்தியை கேட்க

மவுன்ட் மவுன்கனுய்: நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது. தொடரை 0-3 என முழுமையாக இழந்தது.

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதல் இரு போட்டிகளில் வீழ்ந்த இந்திய அணி ஏற்கனவே 0-2 என தொடரை இழந்துவிட்டது. மூன்றாவது மற்றும் கடைசி போட்டி மவுன்ட் மவுன்கனுயில் நடந்தது. இந்திய அணியில் கேதர் ஜாதவ் நீக்கப்பட்டு மணிஷ் பாண்டே இடம்பிடித்தார். நியூசிலாந்து அணியில் பிளன்டல், சாப்மேனுக்குப்பதில் காயத்திலிருந்து மீண்ட வில்லியம்சன், சான்ட்னர் இடம்பெற்றனர். 'டாஸ்' வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் பவுலிங் தேர்வு செய்தார்.


latest tamil news



கோஹ்லி ஏமாற்றம்


இந்திய அணிக்கு பிரித்வி ஷா, மயங்க் அகர்வால் ஜோடி துவக்கம் தந்தது. மயங்க் அகர்வால் ஒரு ரன்னில் அவுட்டானார். கேப்டன் கோஹ்லி (9) ஏமாற்றினார். பிரித்வி ஷா (40) ரன் அவுட்டானார். ஸ்ரேயாஸ் ஐயர், லோகேஷ் ராகுல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஸ்ரேயாஸ் (62) அரை சதம் கடந்தார். அபாரமாக விளையாடிய ராகுல், ஒரு நாள் அரங்கில் 4வது சதம் அடித்தார். இவர் 112 ரன்களில் ஆட்டமிழந்தார். பென்னெட் பந்தில் மணிஷ் பாண்டே (42) சிக்கினார். இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 296 ரன்கள் எடுத்தது. ஜடேஜா (8), சைனி (8) அவுட்டாகாமல் இருந்தனர். நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக பென்னெட் 4 விக்கெட் கைப்பற்றினார்.


latest tamil news



சிறப்பான துவக்கம்


நியூசிலாந்து அணிக்கு கப்டில், நிக்கோல்ஸ் ஜோடி நல்ல அடித்தளம் அமைத்தனர். கப்டில் (66) அரை சதம் விளாசினார். சகால் 'சுழலில்' கேப்டன் வில்லியம்சன் (22) ஆட்டமிழந்தார். நிக்கோல்ஸ் அரை சதம் கடந்தார். ஜடேஜா பந்தில் டெய்லர் (12) சிக்கினார். ஷர்துல் 'வேகத்தில்' நிக்கோல்ஸ் (80) அவுட்டானார். நீஷம் 19 ரன்கள் எடுத்தார். லதாம், கிராண்ட்ஹோம் இணைந்து அசத்தினர். கிராண்ட்ஹோம் அரை சதம் கடந்தார். நியூசிலாந்து அணி 47.1 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 300 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. லதாம் (32), கிராண்ட்ஹோம் (58) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் அதிகபட்சமாக சகால் 3 விக்கெட் வீழ்த்தினார். இந்திய அணி 0-3 என தொடரை முழுமையாக இழந்தது.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
11-பிப்-202020:03:19 IST Report Abuse
Sampath Kumar அம்புட்டு தான் மம்பட்டி வெட்டு என்று நாம கிராமத்தில் சொல்வாங்க
Rate this:
Cancel
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
11-பிப்-202019:46:09 IST Report Abuse
Loganathan Kuttuva சம பலம் வாய்ந்த அணிகள்
Rate this:
Cancel
vnatarajan - chennai,இந்தியா
11-பிப்-202017:12:30 IST Report Abuse
vnatarajan இந்தியா 297 ரன் எடுத்தும் தோல்விக்கு காரணம் இந்திய தரப்பில் பவுலிங் சரியில்லாதது தான் தோல்விக்கு காரணம் . அதுவும் தாகூர் வள்ளல் ஒவொரு ஓவருக்கும் அதிக ரன்களை வாரிக்கொடுத்துவிட்டார். அவருடைய பால் கள் பவுண்டரி அடிக்க மிகவும், சாதகமாக இருந்தது. பொறுப்போடு பவுலிங் செய்யவில்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X