சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாய்மொழி உத்தரவால் ரேஷன் கடையில் மோதல்: பணியாளர் சங்கம் அரசுக்கு முறையீடு

Added : பிப் 11, 2020
Advertisement

பொள்ளாச்சி:ரேஷன் கார்டில், ஆதார் எண் இணைக்காவிட்டால், ஒட்டு மொத்த குடும்பத்துக்கும் அரிசி வழங்க தடைவிதித்த வாய்மொழி உத்தரவால், கடைகளில் மோதல் ஏற்படுவதாக பணியாளர் சங்கம் அரசுக்கு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு ரேஷன்கடை பணியாளர் சங்கத்தின், பொள்ளாச்சி வட்டக்கிளை கூட்டம், பணியாளர் சங்க கட்டடத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாநில தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் கனகசபாபதி வரவேற்றார்.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:ரேஷன்கடைகளுக்கு சமச்சீராக அரிசி ஒதுக்கீடு செய்வதில்லை. ஒவ்வொரு கடைக்கும் மாறுபட்டு வழங்கப்படுகிறது. இதனால், பொதுமக்களுக்கு முழுமையான அளவில் அரிசி வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.'கெரசின்' ஒதுக்கீட்டில், 30 சவீதத்துக்கும் குறைவாகவே உள்ளதால், அட்டைதாரர்களுக்கு ஒரு லி., முதல் மூன்று லி., வரை வெவ்வேறு அளவுகளில் வழங்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. ரேஷன் கடைகளுக்கு, 100 சதவீதம் ஒதுக்கீடு வழங்க வேண்டும்.பி.ஓ.எஸ்., இயந்திரம் வழங்கப்பட்டு மூன்றாண்டுகள் ஆகிவிட்டதால், பல இடங்களில் தொடுதிரை, ஸ்கேனர் பழுதடைந்துள்ளன. இதனால், விற்பனையாளர்கள் மிகுந்த சிரத்துக்கு ஆளாகியுள்ளனர். எனவே, மாற்று இயந்திரம் அல்லது உதிரிபாகங்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.பி.ஓ.எஸ்., இயந்திரங்கள் பழுதடைந்து, தகவல் தெரிவிக்கப்பட்டும், குறிப்பிட்ட நிறுவன ஊழியர்கள் விரைந்து வராமல் தாமதம் செய்கின்றனர். ஒவ்வொரு வட்டத்துக்கும் தனித்தனி ஊழியர்களை நியமித்து, இயந்திரங்களின் பழுது நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ரேஷன் கார்டுகளில், ஐந்து வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளின் ஆதார் பதிவுக்கு தாமதமாகிறது.
ஆதார் இணைக்காத கார்டுதாரர்களின் பெயரை நீக்க வேண்டும் அல்லது, ரேஷன் கார்டுக்கு பொருள் நிறுத்தம் செய்ய வேண்டும் என, வட்ட வழங்கல் அதிகாரிகள் வாய்மொழி உத்தரவிட்டுள்ளனர்.இது, விற்பனையாளர் களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே மோதல்கள், பிரச்னைகளை கிளப்பிவிட்டுள்ளது.அரசு அறிவிதுள்ள அகவிலைப்படி, ரேஷன்கடை பணியாளர்களுக்கு, 114 சதவீதமாக உயர்ந்தும், பெரும்பாலான கூட்டுறவு சங்கங்களின் கீழ் செயல்படும் ரேஷன்கடை ஊழியர்களுக்கு வழங்கவில்லை. உடனடியாக அனைவருக்கும் அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும்.இவையுள்ள தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. துறை அதிகாரிகளுக்கும், அரசு செயலருக்கும் அனுப்பப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X